இன்றைய காலத்தில் சோசியல் மீடியா பயன்படுத்தாத நபர்களே கிடையாது. தனது அன்றாட நிகழ்வுகளான சாப்பிடும் உணவுகள், வெளியே செல்லும் இடங்கள், மனநிலை போன்ற அனைத்தையும் சோசியல் மீடியாக்களில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் இன்ஸ்டாகிராம் செயலியை அதிகமான இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது போல இன்ஸ்டாகிராமிலும் நமக்கு விருப்பமான விஷயங்களை ஸ்டோரியா வைக்க முடியும். ஆனால் நாம் வைக்கும் சில ஸ்டோரிகளை சிலர் மட்டுமே பார்த்தால் போதுமே என நினைக்கும் நபர்கள் உண்டு. அதற்கு தனிப்பட்ட காரணங்கள் பல இருக்கலாம். இப்போது இன்ஸ்டாகிராமில் சிலர் மட்டுமே பார்க்கும் படியாக உங்களுடைய ஸ்டோரியை வைக்க முடியும். அது எப்படி எனத் தெரிந்து கொள்வோம்.
அதிர்ஷ்டவசமாக உங்கள் ஸ்டோரியை யார் பார்க்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் ஆப்ஷன் இன்ஸ்டாகிராம் செயலில் உள்ளது. இதற்காக நம்முடைய ஸ்மார்ட் போனில் எந்த செட்டிங்ஸும் மாற்ற வேண்டாம். Instagram-ல் ஏற்கனவே நெருங்கிய நண்பர்கள் என்று ஒரு ஆப்ஷன் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வசதி கடந்த சில காலமாகவே இன்ஸ்டாகிராமில் உள்ளது.
உங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை குறிப்பிட்ட நபர்கள் பார்க்க முடியாதபடி செய்வதற்கு, முதலில் இன்ஸ்டாகிராமில் உங்களது ப்ரொஃபைல் பக்கத்திற்கு செல்லுங்கள்.
அதன் பின்னர் வலது மேல் புறத்தில் இருக்கும் மெனுவை கிளிக் செய்யுங்கள். அதில் காட்டப்படும் Settings & Privacy என்பதை தேர்வு செய்து, யாரெல்லாம் உங்களுடைய பதிவை பார்க்கலாம் என்பதை செலக்ட் செய்யுங்கள்.
பின்னர் அதில் Hide Story and live என்பதை தேர்வு செய்து அதன் உள்ளே சென்று உங்கள் ஸ்டோரியை யாரெல்லாம் பார்க்கக்கூடாது என்பதை தேர்வு செய்தால், அந்த நபர்களுக்கெல்லாம் நீங்கள் பதிவிடும் ஸ்டோரி தெரியாது.
இந்த வழிமுறையைப் பின்பற்றி குறிப்பிட்ட நபர்கள் உங்கள் ஸ்டோரியை பார்ப்பதிலிருந்து தடுக்க முடியும். அதேபோல குறிப்பிட்ட நபர்களின் பதிவுகளை நீங்கள் பார்க்க வேண்டாம் என்றாலும் இன்ஸ்டாகிராம் செட்டிங்கில் இருக்கும் what you see என்ற ஆப்ஷனை பயன்படுத்தி மறைக்க முடியும்.