ஒரு ஆதார் கார்டில் எத்தனை சிம் கார்டுகளை வாங்க முடியும்?

Aadhar Card
Sim Card
Published on

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஆதார் கார்டு தான் தனிநபர் அடையாள அட்டையாக இருக்கிறது. ரேஷன் கார்டு முதல் சிம் கார்டு வரை அனைதிற்கும் ஆதார் கார்டு அவசியமானதாக உள்ளது. இந்நிலையில் ஒருவர் ஒரு ஆதார் கார்டை வைத்து எத்தனை சிம் கார்டுகளை வாங்க முடியும் என்பது பலருக்கும் தெரியாது. ஏனெனில் இதுபற்றிய விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படுத்தப்படவில்லை.

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியினால் நமக்கே தெரியாமல் நமது தகவல்கள் திருடப்பட்டு வருகின்றன. ஒருவருடைய ஆதார் கார்டைப் பயன்படுத்தி வேறொருவர் சிம் கார்டு வாங்கி, அதனைத் தவறான வழியில் பயன்படுத்துவதும் ஆங்காங்கே அரங்கேறுகிறது. ஆகையால் சிம் கார்டு வாங்கும் போது நாம் கவனமுடன் இருப்பது நல்லது.

ஆதார் கார்டு வருவதற்கு முன்பெல்லாம் ரேசன் கார்டு நகலைக் கொடுத்து தான் சிம் கார்டு வாங்கி வந்தோம். ஆனால் ஆதார் கார்டு வந்த பிறகு, சிம் கார்டு மட்டுமல்ல எது வாங்க வேண்டுமென்றாலும் முதலில் ஆதார் கார்டைத் தான் கேட்கிறார்கள். பொதுவாக ஒரு ஆதார் கார்டைப் பயன்படுத்தி 9 சிம் கார்டுகள் வரை வாங்க முடியும். இத்தனை சிம் கார்டுகள் வாங்க முடியுமா என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும், நமக்குத் தேவைப்படும் வகையில் ஒன்று அல்லது இரண்டு சிம் கார்டுகளை வாங்குவது தான் நல்லது. அசாம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 6 சிம் கார்டுகள் மட்டுமே வாங்க முடியும்.

இன்றைய காலத்தில் ரீசார்ஜ் கட்டணம் அதிகமாக உள்ளது. இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருப்பது நமது செலவை அதிகப்படுத்தி விடும். மேலும் சாலையோரங்களில் ஆதார் கார்டைக் கொடுத்து சிம் கார்டுகள் வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் நமது ஆதார் கார்டைக் கொண்டு போலி சிம் கார்டுகளை, மோசடி நபர்களுக்கு விற்று விடுவார்கள். இதனால் நாம் ஆபத்தில் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் உங்களது ஆதார் கார்டில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்வதும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
செயல்படாத PF கணக்குகளை முறைப்படுத்தும் வழிமுறைகள் இதோ!
Aadhar Card

https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்ற இணைய தளத்திற்குச் சென்று உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டால், உடனே ஒரு ஓடிபி வரும். அதனைக் கொண்டு உள்நுழைந்தால், உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். நீங்கள் உபயோகிக்கும் சிம் கார்டு எண்ணைத் தவிர்த்து, வேறு ஏதேனும் சிம் கார்டுகள் உங்கள் பெயரில் இருந்தால், “நாட் மை நம்பர்” என்ற பொத்தானை கிளிக் செய்து புகார் அளிக்கலாம். இதன் மூலம் கூடிய விரைவிலேயே அந்த எண் உங்கள் பெயரில் இருந்து நீக்கப்படும்.

தொழில்நுட்ப கட்டமைப்புகள் வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய காலத்தில், மோசடிகளுக்கு பஞ்சமில்லை. ஆகையால் நமது பாதுகாப்பை நாம் தான் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com