ஜி மெயிலுக்கு எத்தனை வயது?

g mail image
g mail image

ந்த வருடம் ‘அனைத்து முட்டாள்கள் தினம்’ அன்று ஜிமெயிலுக்கு இருபது வயது பூர்த்தி ஆனது. 2004ஆம் வருடம் கூகுள் ஜிமெயில் சேவை அளிப்பதாக அறிவித்தபோது, மக்கள் இந்த அறிவிப்பை மக்களை முட்டாள் ஆக்குவதற்கான முயற்சி என்று நினைத்தார்கள். கூகுள் இந்த ஜிமெயில் சேவை இலவச சேவை, மெயில் சேமித்து வைக்க பயனாளிகளுக்கு 1கிகா பைட் மெமரி (1000 மெகா பைட்) மற்றும் மெயிலைத் தொகுத்து வழங்குதல், நாள் வாரியாக மெயிலை வரிசைப்படுத்துதல் என்று பல வசதிகளுடன் அளிப்பதாக அறிவித்தது.

அந்த நேரத்தில் எலக்ட்ரானிக் மெயில் சேவையை இரண்டு நிறுவனங்கள் அளித்து வந்தன. யாஹூ மெயில் மற்றும், ஹாட் மெயில். ஹாட் மெயில், பயனாளிகள் மெயிலைச் சேமித்து வைக்க 2 மெகா பைட் மெமரி அளித்து வந்தனர். அப்படியிருக்க, கூகுள் எப்படி அதனை விட 500 மடங்கு மெமரி அளிக்க முடியும், அதுவும் இலவசமாக என்ற கேள்வி எழுந்தது.

மேலும், 2000 ஆண்டிலிருந்து எல்லா வருடமும், ஏப்ரல் 1ஆம் தேதி கூகுள் ஏதாவது ஒன்றை அறிவித்து, வாடிக்கையாளரை அந்த சேவைக்கு ஒரு தொடர்பை அழுத்தச் சொல்லும். அதை அழுத்தினால், ‘ஏப்ரல் முட்டாள்’ என்ற செய்தி வரும். கூகுள் இந்த தமாஷை தொடர்ந்து 19 ஆண்டுகள் அதாவது, 2019 வரை செய்துவந்தது. கோவிட் தொற்றுக்குப் பின் இந்த தமாஷ் நிறுத்தப்பட்டது.

ஜிமெயில் அறிவிப்புடன், கூகுள் மற்றொரு அறிவிப்பும் வெளியிட்டது. சந்திரனில் கூகுள் ஒரு ஆராய்ச்சி மையம் தொடங்கப் போவதாகவும், அங்கு வேலை செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தினர். அந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்காக, கோபர்னிகஸ் என்ற மென்பொருளை வடிவமைத்துள்ளதாகவும் அறிவுறுத்தினர். இது ஏப்ரல் முட்டாள் அறிவிப்பு.

கூகுள் ஜிமெயில் சேவைக்காக விண்ணப்பித்து, கூகுளால் அழைத்தவர்களுக்கு மட்டுமே கூகுள் ஜிமெயில் சேவை என்று அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த ஈமெயில் சேவையில் நிறைய குறைபாடுகள் இருப்பதாக பயன்படுத்துபவர்கள் கருத்து தெரிவித்தனர். பொதுவான குற்றச்சாட்டுகள் – வேகம் குறைவு, மெயிலில் தேடும் வசதியிலிருந்த குறைபாடுகள், மெயிலை சேமிக்க இருந்த மெமரி மிகவும் குறைவு. ஆகவே, சில சமயங்கள் மெயில் சிலவற்றை அழிக்க வேண்டிய நிலை. இந்தக் குறைபாடுகளைக் களைந்து, அதிக மெமரியுடன், அதே சமயம் இலவச சேவையாகக் கொடுத்தால் அது கூகுள் முன்னேற்றத்திற்கு நல்லது என்று இந்த முயற்சியில் இறங்கியது கூகுள்.

g mail image
g mail image

இலவசமாக பல வசதிகள் ஜிமெயிலில் கொடுத்தால், கூகுளுக்கு என்ன லாபம்? அவர்களுக்கு இதற்கான பணம் எங்கிருந்து வரும் என்ற கேள்வி எழுந்தது. இலவச வசதிகள் கூகுள் கொடுப்பதால், பயனாளிகள் அவர்களுடைய மெயிலைப் படிக்க கூகுளுக்கு அனுமதியளிக்க வேண்டும். பயனாளிகள் அனுப்புகின்ற, அவர்களுக்கு வருகின்ற மெயிலிலிருந்து கூகுள், பல விஷயங்களை அறிந்து கொண்டு, அதற்கேற்றார் போல மெயிலின் நடுவே கூகுள் விளம்பரங்கள் வெளிவரும். இந்த விளம்பரங்கள் அளிப்பவர்கள் கூகுளுக்கு அதற்கான கட்டணத்தைச் செலுத்துவர்.

இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ‘கெட்டவனாக இருக்காதே’ என்பது கூகுள் நிறுவனத்தின் குறிக்கோள். அப்படியிருக்க கூகுள் எப்படி பயனாளிகளுக்கு வரும் கடிதங்களைப் படிக்கலாம் என்ற கேள்வி எழுப்பினர். கடிதங்களைப் படிக்கப் போவது மனிதர்கள் அல்ல, அதை படிக்கப்போவது அதற்கான வடிவமைக்கப்பட்ட மென்பொருள். என்பது கூகுளின் பதில் ஆக இருந்தது.  

மெயிலில் வருகின்ற விவரங்கள் மூலம் விளம்பரம் வாயிலாக பணம் சம்பாதிக்க நினைக்கிறது கூகுள். எதிர்காலத்தில், இதனை மற்றவர்கள் தவறான வழிகளில் உபயோகித்தால் என்ன செய்வது என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், இந்த எதிர்ப்பை பற்றி கூகுள் கவலைப்படவில்லை. கூகுளின் ஜிமெயில் அழைப்பைப் பெற 250 அமெரிக்கன் டாலர்கள் கொடுத்து பலர் இந்த அழைப்பை வாங்கினர்.

அடுத்த 10 வருடங்களுக்கு, பயனாளிகளின் மெயிலை கூகுள் படித்து வந்தது. 2007ஆம் ஆண்டு, வாலண்டைன் தினம் அன்று கூகுள் ஜிமெயில் சேவையை எல்லோரும் பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. 2012ஆம் வருடம் உலகெங்கும் 425 மில்லியன் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வந்தனர். 2017ஆம் வருடம், விளம்பரத்திற்காக பயனாளிகளின் மெயிலைப் படிப்பதை நிறுத்தியது கூகுள்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் "கெத்தாக" இருக்க உதவும் 10 விஷயங்கள்...!
g mail image

கூகுள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்:

* கூகுளின் ஜிமெயில் சேவையை வடிவமைத்தவர் பால்புஷெய்ட். இதற்கு உதவியவர்கள் சஞ்சீவ் சிங், கெவின் ஃபாக்ஸ்.

* உலகில் மொத்தம் 140 ஈமெயில் வசதிகள் உள்ளன. முதலிடத்தில் 40.47 சதவிகிதத்தில் மைக்ரோ சாஃப்ட். இரண்டாவது இடம் ஜிமெயில் 35.96 சதவிகிதம்.

* ஜிமெயில் பயனாளிகளில் 64.6 சதவிகிதம் அமெரிக்க அலுவலகங்கள், 7.38 சதவிகிதம் பிரிட்டனைச் சேர்ந்த அலுவலகங்கள், 6.17 சதவிகிதம் இந்திய அலுவலகங்கள்.

* இந்தியாவில் ஈமெயில் சேவை உபயோகிப்பவர்களில் 82.4 சதவிகிதம் ஜிமெயில் உபயோகிப்பவர்கள்.

* 2013ஆம் வருடம் முதல் ஜிமெயில், பயனாளிகளுக்கு 15 கெகா பைட் மெமரி அளித்து வருகிறது.

* இத்தனை வருடங்களில் ஜிமெயில் சேவையில் ஒரே ஒரு முறை 2.5 மணி நேரம் தடங்கல் ஏற்பட்டது.

* உலகெங்கும் ஜிமெயில் உபயோகிப்பவர் எண்ணிக்கை சுமார் 200 கோடி.

* ஒரு நாளைக்கு சுமார் 36160 கோடி மெயில்கள் அனுப்பப்படுகின்றன அல்லது பெறப்படுகின்றன.

* ஜிமெயில் வருவாயை கணக்கிட்டால் சராசரி ஒரு ஜிமெயில் பயனாளியின் மதிப்பு சுமார் 3500 அமெரிக்கன் டாலர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com