Deepfake செய்யப்பட்ட வீடியோக்களை எப்படி கண்டுபிடிப்பது?

How to find Deepfake videos?
How to find Deepfake videos?
Published on

Deepfake என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேறு ஒருவரின் முகத்தை பிரபலமானவர்களின் முகம் போல மாற்றி அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் நடிகைகளாகவே உள்ளனர். சமீபத்தில் கூட ராஷ்மிகா மந்தனாவின் Deepfake செய்யப்பட்ட காணொளி இணையத்தில் வைரல் ஆனது. 

Deepfake தொழில்நுட்பம் என்பது ஆடியோ வீடியோ புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை போலியாக உருவாக்குவதைக் குறிக்கும் சொல்லாகும். இந்தத் தொழில்நுட்பத்தில் வழக்கமான போலி உருவாக்கும் முறைகளுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இப்படி உருவாக்கப்படும் போலி வீடியோக்களும் புகைப்படங்களும் பார்ப்பதற்கு ஒரிஜினல் போலவே இருக்கும். இப்படி உருவாக்கப்பட்ட வீடியோக்கள் போலியானது என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாகும். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்த நபரின் வீடியோ ஆடியோ புகைப்படங்களை வேண்டுமானாலும் போலியாக உருவாக்க முடியும் என்பதால், இதில் அதிக ஆபத்து நிறைந்துள்ளது. 

இத்தகைய போலியான வீடியோக்களால் பிரபலங்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. சமீபத்தில் Deepfake செய்யப்பட்ட ராஷ்மிகா மந்தனாவின் காணொளி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மையிலேயே அது ராஷ்மிகா மந்தனாதான் என பலரும் நம்பிவிட்டனர். அமிதாப்பச்சன் போன்ற பல பிரபலங்கள் இதுபோன்று போலியாக உருவத்தை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

Deepfake செய்யப்பட்ட வீடியோக்களை சில வழிமுறைகளைப் பின்பற்றி அவை போலியானது தான் என நம்மால் கண்டுபிடிக்க முடியும்.

  • Deepfake செய்யப்பட்ட காணொளியில் முக பாவனைகள் அடிக்கடி மாறும். குறிப்பாக உதடுகள், கண்கள், குரல் போன்றவற்றை நன்றாக கவனித்தால் நம்மால் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியும். 

  • அதேபோல வீடியோவுக்கு பின்னால் உள்ள பேக்ரவுண்ட் அவ்வப்போது மாறிக் கொண்டிருந்தால் அதுவும் போலியாக உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம்.

  • வீடியோவில் உள்ள வெளிச்சம் மற்றும் நிழலைப் பயன்படுத்தியும் போலி வீடியோக்களை கண்டுபிடிக்க முடியும். உண்மையான வீடியோக்களை விட போலி வீடியோக்களில் வெளிச்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

  • அதேபோல, அந்த காணொளி எதுபோன்ற நோக்கத்திற்காக பதிவிடப்பட்டுள்ளது என்பதை வைத்தும் அது உண்மையான வீடியோதானா என கண்டுபிடிக்கலாம். 

இதுபோன்ற சில வழிமுறைகளைப் பயன்படுத்தி நம்மால் போலி வீடியோக்களை கண்டுபிடிக்க முடியும். இருப்பினும் பெரும்பாலான நபர்களுக்கு இதுபற்றி பெரிதும் தெரிவதில்லை என்பதால், போலியான காணொளியில் இருக்கும் நபரின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடுகிறது. எனவே இத்தகைய தொழில்நுட்பத்திடம் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com