Threads செயலியை கம்ப்யூட்டரில் எப்படி இன்ஸ்டால் செய்வது?

Threads செயலியை கம்ப்யூட்டரில் எப்படி இன்ஸ்டால் செய்வது?

மெட்டா நிறுவனத்தின் த்ரெட் செயலி தற்போது எல்லாவித ஸ்மார்ட் ஃபோன்களிலும் பயன்படுத்தும் வகையில் ஆப் வடிவில் வெளிவந்திருந்தாலும், நீங்கள் சிறு முயற்சி செய்தால் அதை உங்கள் டெஸ்க்டாப் கணினியிலேயே இன்ஸ்டால் செய்யலாம். 

ட்விட்டர் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக வெளிவந்த திரட் செயலி, வெளிவந்த சில தினங்களிலேயே பத்து மில்லியன் பயனர்களை தன்வசம் இழுத்துக்கொண்டது. இதனால் கோபமடைந்த எலான் மஸ்க், எங்களின் தரவுகளைத் திருடி தான் இந்த செயலியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று வழக்கு தொடுத்தார். இருப்பினும் Threads செயலியின் ஆதிக்கம் தொடர்ந்துகொண்டே போகிறது எனலாம். கடந்த சில மாதங்களாகவே ட்விட்டரின் போக்கு சரியில்லாததால், அதன் பயனர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மார்க் ஜுகர்பெர்க், ட்விட்டரில் உள்ள எல்லா அம்சங்களும் கொண்ட புதிய செயலியை வெளியிட்டு, சரியாக பறக்க முடியாத நீலப் பறவையை தன்னுடைய த்ரெட் நூலில் சிக்க வைத்துவிட்டார். 

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தாலும், இந்த செயலியை ஸ்மார்ட்ஃபோனில் மட்டுமே பயன்படுத்தும் படியாக இருப்பது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில வழிமுறைகளைப் பயன்படுத்தி திரட் செயலியை ஸ்மார்ட்ஃபோனில் பயன்படுத்துவது போலவே கணினியில் நம்மால் பயன்படுத்த முடியும். 

(நாம் இதைத் தொடங்குவதற்கு முன்பு உங்கள் டெஸ்க்டாப்பில் சமீபத்திய விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் அதில் Amazon Appstore சப்போர்ட் ஆகிறதா என்றும் பார்த்துக் கொள்ளுங்கள்.)

முதலில் உங்கள் கணினியில் மைக்ரோசாப்ட் ஸ்டோருக்கு சென்று Amazon Appstore மற்றும் Windows Subsystem For Android இன்ஸ்டால் செய்து கொள்ளவும். Amazon Appstore இன்ஸ்டால் செய்த பிறகு உங்களுடைய கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். பின்னர் தானாகவே Windows Subsystem For Android இன்ஸ்டால் ஆகும்.

அடுத்ததாக Threads செயலியின் APK கோப்பை டவுன்லோட் செய்யவும். இதை கூகுளில் நீங்கள் தேடினாலே எளிதாக டவுன்லோட் செய்யலாம். பின்னர் மைக்ரோசாப்ட் ஸ்டோரில் WSA Tools என்பதை தேடிப் பார்த்து அதையும் இன்ஸ்டால் செய்யவும். இது இன்ஸ்டால் ஆனதும் அதன் உள்ளே சென்று, Install an APK என்பதை கிளிக் செய்தால், நீங்கள் பதிவிறக்கம் செய்த Threads செயலியின் APK கோப்பை தேர்வு செய்து, ஸ்மார்ட்ஃபோனில் செய்வது போலவே எளிதாக இன்ஸ்டால் செய்யலாம். 

அவ்வளவுதான் இனி நீங்கள் ஸ்மார்ட்ஃபோனில் திரெட்ஸ் செயலியை பயன்படுத்துவது போலவே கணினியிலும் பயன்படுத்த முடியும். இதே முறையை பயன்படுத்தி ஸ்மார்ட் ஃபோனில் நீங்கள் பயன்படுத்தும் எல்லா ஆப்களையும் கணினியில் உபயோகிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com