உங்களுக்கு வந்தது போலி மெசேஜ் எனக் கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா? 

How to spot a fake message you received?
How to spot a fake message you received?

இன்றைய காலகட்டத்தில் மோசடிக்காரர்கள் பல வழிகளில் நம்மை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அதிலும் குறிப்பாக நமது செல்போனுக்கு பல வழிகளில் குறுஞ்செய்திகள் அனுப்பி நம்மை ஏமாற்ற நினைக்கிறார்கள். அதுபோன்ற மோசடிக்காரர்கள் இடமிருந்து உங்களுக்கு வரும் போலி மெசேஜ்களை எப்படி கண்டுபிடிப்பது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

உலகம் கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் மையமாக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. மோசடிக்காரர்கள் போலியான மெசேஜ், அழைப்புகள், இமெயில் போன்றவற்றை அனுப்பி ஒருவரது வங்கிக் கணக்கு குறித்த விவரங்களைப் பெற்று பணத்தை திருட முயற்சிக்கின்றனர். 

எனவே இத்தகைய போலி மெசேஜ்கள், அழைப்புகளை அலட்சியமாக எடுத்துக் கொண்டால், நாம் பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகள் போலியாதுதானா என்பதைக் கண்டறிய சில தந்திரங்கள் உள்ளது. 

  1. பெரும்பாலும் இத்தகைய மோசடிக்காரர்கள் வங்கியிலிருந்து குறுஞ்செய்தி வருவது போல மெசேஜ்களைத் தவறாக சித்தரித்து அனுப்புவார்கள். எனவே முதலில் உங்களுக்கு வரும் மெசேஜ் எந்த எண்ணிலிருந்து வருகிறது என்பதைப் பாருங்கள். வங்கிகளிடமிருந்து வரும் மெசேஜ்கள் அனைத்தும் அந்த குறிப்பிட்ட பேங்கின் பெயரைப் போட்டுதான் வரும். எந்த தனிப்பட்ட எண்ணிலிருந்தும் வங்கிகள் மெசேஜ் அனுப்ப மாட்டார்கள். எனவே தனிப்பட்ட எண்ணிலிருந்து வங்கி சார்ந்த குறுஞ்செய்திகள் வந்தால் அவற்றை நம்ப வேண்டாம்.

  2. அதேபோல உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளில் பிழை இருக்கிறதா என வாசித்துப் பாருங்கள். ஏனெனில் வங்கிகள் மூலம் அனுப்பும் குறுஞ்செய்திகள் துல்லியமாக பிழையின்றி இருக்கும். மோசடிக்காரர்கள் தானாக எழுதும் மெசேஜ்களில் பிழை இருக்கும் என்பதால் அவை போலியானது எனத் தெரிந்து கொள்ளலாம். 

  3. குறிப்பாக உங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது என வரும் எந்த மெசேஜ் மற்றும் அழைப்பையும் நம்ப வேண்டாம். ஏனெனில் அது நிச்சயம் போலியான மெசேஜாகத்தான் இருக்கும். வங்கிகளில் இருந்து ஒருபோதும் உங்களுக்கு இலவசமாக பரிசு கொடுக்க மாட்டார்கள். அதே நேரம் தவறுதலாக கூட அவர்கள் அனுப்பும் மெசேஜில் இருக்கும் லிங்குகளை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டாம். அதன் மூலம் உங்களுடைய தனிப்பட்ட விபரங்கள் அனைத்தும் திருடப்படும் வாய்ப்புள்ளது. 

இப்படி இந்த 3 வழிமுறைகளைப் பின்பற்றி உங்களுக்கு வருவது போலியான மெசேஜ் தானா என்பதை நீங்கள் கண்டறிய முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com