போலி ஆன்லைன் விளம்பரங்களை கண்டறிவது எப்படி?

Fake online ads scam
Fake online ads scam
Published on

விளம்பரங்களை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி செய்யும் கும்பலிடம் இருந்து எவ்வாறு தப்பிப்பது.

இணைய வழி திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும் அதே நேரம் அதை பயன்படுத்தி மோசடி செய்பவர்களினுடைய செயல்பாடும் நாளுக்கு நாள் புதுப்புது கோணங்களில் புதுப்புது வடிவங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறையாகின்றனர். இதனால் ஆன்லைனை பயன்படுத்தும் ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு வினாடியும் விழிப்போடு செயல்பட வேண்டும் என்கிறது இந்திய சைபர் குற்ற தடுப்பு பிரிவு.

மோசடி விளம்பரங்களை பயன்படுத்தி அதன் மூலம் பணம் செலுத்த சொல்லி மக்களை ஏமாற்றும் செயல்பாடு தற்போது அதிகரித்து இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டு பல மக்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் என்பது வேதனைக்குரிய விஷயம் ஆகும். இவ்வாறு சமூக வலைதளங்கள், எஸ்எம்எஸ், மின்னஞ்சல்கள், மற்றவகை குறுஞ்செய்திகள், இ காமெர்ஸ் தளங்கள் மூலமாக விளம்பரங்கள் செய்து அவற்றின் மூலமாக முதலீடு செய்ய வைத்து மோசடி செய்யும் நிலை தற்போது அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் போலி ஆன்லைன் விளம்பரங்களை கண்டறிவது எப்படி?

  • போலி நிறுவனங்கள் ட்ரெண்டிங்கில் உள்ள பொருட்களை வரையறை இல்லாமல் இணையதளம் முழுவதும் விளம்பரம் செய்வார்கள்.

  • மிகக்குறைந்த விலையில் தருவதாக விளம்பரங்கள் இருக்கும்.

  • பொருட்களை வாங்கும் முன் தொகைகளை செலுத்த சொல்லி வற்புறுத்துவார்கள். பிறகு ஜிஎஸ்டி, டெலிவரி கட்டணங்களை கூடுதலாக கேட்டு கட்டாயப்படுத்துவார்கள்.

  • மக்களை நம்ப வைக்க டெலிவரி ட்ராக்கிங்கை போலியாக அனுப்புவார்கள். பணம் செலுத்திய பிறகு நம்பரை பிளாக் செய்து தப்பி விடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
மடிக்கணினியில் இருக்கும் தூசியை அகற்றுவது எப்படி?
Fake online ads scam
  • இந்த குறிப்பிட்ட ஆஃபர் குறிப்பிட்ட காலம் வரை என்று சொல்லி நம்ப வைப்பார்கள்.

  • விளம்பரங்களை பார்த்தவுடன் கமெண்ட் சென்று பார்வையிட வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும்.

  • சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நம்பத் தகுந்த இணையதளங்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு https ://who.is அல்லது https://isitphishing.org அல்லது https://www.socialsearcher.com/google- social-searcher ஆகிய தளங்களில் குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் பெயரை ஆய்வு செய்து அதனுடைய உண்மை தன்மையை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு விழிப்போடு இருப்பதன் மூலம் ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் ஏமாறாமல் இருக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com