காரில் ஏசியை எவ்வாறு பயன்படுத்தினால் அதிக பயன் தரும்.
வெயில் இன்று மக்கள் சந்திக்கக்கூடிய மிக முக்கிய சிக்கல்களில் ஒன்றாக இருக்கிறது. இதனாலேயே வீடு, நிறுவனம், வாகனம் என்று அனைத்து இடங்களிலும் வெயிலை சமாளிக்க ஏசி பெருமாளின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்பு ஆடம்பரப் பொருளாக இருந்த ஏசி தற்போது அத்தியாவசிய பொருளுக்கு இணையான ஒன்றாக மாறி வருகிறது. காரணம் அளவுக்கு அதிகமான வெயில்.
இந்த நிலையில் ஏசியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் ஏசியால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை பற்றிய செய்திகள் அடிக்கடி நாளிதழ்களில் காண முடிகிறது.
இதன் தொடர்ச்சியாக கார்களில் எவ்வாறு ஏசியை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்ப்போம். தற்போது அறிமுகம் செய்யப்படும் அனைத்து கார்களிலும் இரண்டு வகையான ஏசி மோட்கள் இருக்கும். இவற்றில் ஆட்டோ ஹச்.விஏசி என்பது தானாக அட்ஜஸ்ட்மென்ட் ஆகிக் கொள்ளும் வகையிலானது. இது சூழலுக்குத் தகுந்தார் போல் குறைந்தும் உயர்ந்தும் மாறி காற்றை அளிக்கும் தன்மை கொண்டது. இந்த ஆட்டோ ஹெச்.வி ஏசி மோடில் இரண்டு வகை பட்டன்கள் இருக்கும். அவற்றில் ஒன்று பிரஷார் மோட். இது அதிகாலை நேரத்திலும், காற்று மாசு இல்லாத இடத்திலும், தூய காற்று இருப்பதாக எண்ணக்கூடிய நேரத்தில் மட்டுமே பயன்படுத்த ஏற்றது. குப்பை கூடங்கள், மற்ற காற்று மாசு பகுதிகளில் இந்த மோடை பயன்படுத்தும் பொழுது வெளியே வீசும் துர்நாற்றம் காரின் உள்பகுதியிலும் வீசக்கூடும்.
மற்றொன்று ரிசர்குலேசன் மோட். இதுவே பெரும்பான்மையாக பயன்படுத்தும் பட்டனாகும். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் ஏசி பகுதியில் சேரும் கழிவுகள் குறையும். இதனால் ஏசியை பழுதுபார்க்க ஆகும் செலவும் குறையும். இதுவே அனைத்து வகை சூழல்களையும் எதிர்கொள்ளும் தன்மையை கொண்டிருப்பதால் பெரும்பாலும் வாகனங்களில், பெரும்பான்மையான நேரங்களில் இந்த வகை பட்டனே பயன்படுத்தப்படும்.