கூகுள் போன்களை வாங்க சரியான நேரம் இது: அதிரடி ஆஃபர் அறிவிப்பு!

கூகுள் போன்களை வாங்க சரியான நேரம் இது: அதிரடி ஆஃபர் அறிவிப்பு!

கூகுள் பிக்சல் மொபைல் போன்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் பெருமளவிலான தள்ளுபடி அறிவித்து உள்ளது. இதன் மூலம் கூகுள் பிக்சல் 7ஏ 4,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ள கூகுள் இந்தியாவின் பெருமளவில் மொபைல் போன் விற்பனையில் ஈடுபடவில்லை என்றாலும் பிளிப்கார்ட் ஆன்லைன் சேவை வழியாக பிரத்யேக விற்பனை மேற்கொண்டு வருகிறது. கூகுள் நிறுவனத்தினுடைய பல்வேறு வகையான மொபைல் போன்கள் பிளிப்கார்ட் இணையதளத்தின் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இந்த நிலையில் தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்குவதை அடுத்து கூகுள் நிறுவனம் மிகப்பெரிய ஆஃபரை அறிவித்துள்ளது.

கூகுள் பிக்சல் 8 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூகுள் பிக்சல் 7ஏ, கூகுள் பிக்சல் 7, கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஆகியவை மாபெரும் சலுகைகளுடன் விற்பனை செய்ய ப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் கூகுள் பிக்சல் 7 ஏ 43, 999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 39, 299 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு வெறும் 4,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் இந்த மாபெரும் சலுகைகளை பிளிப்கார்ட் இணையதளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது கூகுள் பிக்சல் நிறுவனத்தின் உடைய மற்ற வகை மாடல்களினுடைய விலையும் பெருமளவில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கூகுள் பிக்சல் மொபைல் போன் மாடல்களை வாங்குபவர்களுக்கு அனைத்து வகையான வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தினுடைய இந்த மாபெரும் சலுகை இந்திய பயனாளிகளிடம் மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் சார்பிலும் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலத்தின் போது சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் வரும் அக்டோபர் தேதி 8 பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் சேல் 2023 அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நாளில் அனைத்து வகையான பொருட்களுக்கும் பல்வேறு வகையான சலுகைகள், தள்ளுபடிகள் வழங்கப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த குறிப்பிட்ட நாளில் இந்தியாவில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு பிளிப்கார்ட் நிறுவனத்தில் வணிகம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com