பார்வையாளர்களைக் கவர்ந்த மனித உருவ ரோபோக்கள்! எங்கே தெரியுமா? 

Humanoid robots that captivated the audience.
Humanoid robots that captivated the audience.

பீஜிங்-ல் நடந்த உலக ரோபோக்கள் மாநாட்டில், ஹியூமனாய்டு ரோபாட்டுகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திழுத்தது.


சீன தலைநகர் பீஜீங்-ல் நடைபெற்ற உலக ரோபோக்கள் மாநாட்டில் பலவிதமான ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், அதில் வித்தியாசமாக இருந்த மனித உருவ ரோபோக்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. தற்போது உலகெங்கிலும் AI தொழில்நுட்பமயமாகிக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் ரோபோக்களின் வளர்ச்சியும் அபரிமிதமாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் வெறும் சிறு சிறு அசைவுகளை மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்த ரோபோக்கள், தற்போது மனிதர்களைப் போலவே பாவனைகளையும் துல்லியமான முக அசைவுகளையும் வெளிப்படுத்துகின்றன. 

இவை மனிதர்கள் உடலில் கை, கால் கழுத்து, மணிக்கட்டு, இடுப்பு, மூட்டு போன்றவை செய்யும் எல்லாவிதமான அசைவுகளையும் பார்ப்பதற்கு மனிதர்கள் போலவே செய்வது அனைவரையும் அதிசயிக்க வைக்கிறது. சமீபத்தில் பீஜங்கில் நடந்த உலக ரோபோக்கள் மாநாட்டில், இத்தகைய ரோபோக்களின் செயல்கள் அங்கு வந்து பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

தற்போது எல்லா விதமான விஷயங்களையும் சிறப்பாக செய்யும் விதமாக மனித வடிவ ரோபோக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவற்றின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ் ரோபோட்ஸ் கூறியுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும்போது எதிர்காலத்தில் இந்த ரோபோக்கள் மனிதர்களுக்கு போட்டியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

மனிதர்களை ரோபோக்கள் கட்டுப்படுத்தும் படியான பல ஹாலிவுட் திரைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏன் தமிழில் கூட எந்திரன் திரைப்படம் வந்து நம்மை வியந்து பார்க்கச் செய்தது. ஆனால் இதெல்லாம் நடக்க சாத்தியமில்லை என நாம் நினைத்தாலும், மனிதனின் அறிவாற்றல் சாத்தியமில்லாத ஒன்றையும் சாத்தியப்படுத்தும் விதமாக இருப்பதால், ஒரு நாள் நிச்சயம் மனிதர்களை மிஞ்சும் ரோபோக்கள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது. 

தற்போதைய நவீன யுகம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களை மீறி செயல்படும் பல தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் மும்முரம் காட்டி வருகிறது. இது சொல்லப்போனால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறலாம். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com