விண்வெளியில் ஒருவர் இறந்துவிட்டால் என்ன செய்வார்கள் தெரியுமா?

விண்வெளியில் ஒருவர் இறந்துவிட்டால் என்ன செய்வார்கள் தெரியுமா?
Published on

டந்த 60 வருடங்களில் நிலவை ஆய்வு செய்யச் சென்றவர்களில் இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். 1986 மற்றும் 2003 ஆம் ஆண்டு நடந்த நாசாவின் விண்கல விபத்தில் 14 பேரும், 1971இல் சோயுஸ் 11 மிஷனில் 3 பேரும். அப்போலோ விண்கலம் ஏவப்பட்டபோது நடந்த தீ விபத்தில் 3 பேரும் இறந்துள்ளனர். 

என்னதான் விண்வெளிக்கு செல்வது தற்போது இயல்பாகிவிட்டாலும், விண்வெளிக்குச் செல்பவர்களும் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. 2025ஆம் ஆண்டில் ஒரு குழுவை நிலவுக்கும், 2030ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு குழுவையும் அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இப்போது நமக்கு ஒரு சந்தேகம் ஏழாலாம். அதாவது விண்வெளி வீரர்கள் விண்ணில் இருக்கும்போது அவர்கள் இறந்துவிட்டால் என்ன செய்வார்கள் என்பது.

பூமிக்கு அருகில் இருக்கும் விண்வெளி மையத்தில் யாராவது இறந்துவிட்டால் உடனடியாக அங்கிருக்கும் குழுவினரின் முயற்சியால் சில மணி நேரங்களிலேயே அந்த உடலை கேப்சூலில் வைத்து பூமிக்குக் கொண்டு வந்து விடுவார்கள். அப்படிதான் விண்வெளியில் ஒருவர் இறந்தால் உடனடியாக அவருடைய உடலை பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். விரைவாக உடலை பூமிக்கு கொண்டு வருவதால் அதைப் பதப்படுத்த வேண்டிய அவசியமில்லை. 

பெரும்பாலும் விண்வெளிக்கு அனுப்பப்படும் குழு பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதுவே ஒருவேளை 300 மில்லியன் மைல் தூரத்திலிருக்கும் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து ஒருவர் இறந்துவிட்டால், அவரது உடலை பூமிக்குக் உடனடியாகக் கொண்டுவருவது கடினமாக இருக்கும். எனவே அவரது உடலை ஒரு பிரத்தியாக பையிலோ அல்லது அறையிலோ பதப்படுத்தி செவ்வாய் கிரகத்தில் அவர்களது மிஷினை முடித்து பூமிக்குத் திரும்பும்போது கொண்டு வருவார்கள். இது அனைத்துமே விண்கலம் அல்லது விண்வெளி நிலையத்தில் இறப்பவர்களுக்குப் பொருந்தும். 

இதுவே ஒருவர் முறையான பாதுகாப்பு உடைகளின்றி விண்கலத்தின் வெளியே சென்றால், அதிகப்படியான அழுத்தம், வெற்றிடம், ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் , மூச்சுத்திணறி ரத்த அழுத்தம் ஏற்பட்டு இறந்துவிடுவார். இப்படி இருப்பவர்களை அப்படியே விண்வெளியில் விட்டுவிட மாட்டார்கள். இவர்களையும் ஒரு பையில் பதப்படுத்தி பூமிக்கு கொண்டு வரும் முயற்சியை மேற்கொள்வார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com