AI துறையை கண்டுகொள்ளாமல் விட்டால் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

AI துறையை கண்டுகொள்ளாமல் விட்டால் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

மெரிக்காவின் UC பெர்க்லி யுனிவர்சிட்டியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியரும், மெஷின் லேர்னிங் மற்றும் AI பிரிவின் முன்னணி நிபுணருமான Stuart Russell என்பவர், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சி யானது சரிபார்க்கப்படவில்லை என்றால் உலகம் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

"ஒரு நவீன அணுகுமுறை" என்ற செயற்கை நுண்ணறிவுத் துறையில் அடிப்படை விஷயங்களை உருவாக்கியதில் இணை ஆசிரியராக இருந்த Stuart Russell-ன் இந்த எச்சரிக்கை, உலகெங்கிலும் பல கோடி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சரிபார்க்கப்படாத AI துறையின் வளர்ச்சி என்பது, Chernobyl பேரழிவுக்கு நிகரானது. இது யாராலும் கட்டுப்படுத்த முடியாத அதிபயங்கரப் பேரழிவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். 

ChatGPT-யின் வருகைக்கு முன்பே AI தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளில் அனைத்து பெரிய டெக் நிறுவனங்களும் இறங்கிவிட்டது. இருந்தாலும் இந்த தொழில்நுட்பமானது,  சிறிய மற்றும் நடுத்தர தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதன் இலக்கை அடைவது கடினமாகவே இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சியால், சிறுசிறு செயலிகளில் கூட AI-ன் பங்களிப்பு வந்துவிட்டது எனலாம். 

சமீபத்தில் அறிமுகமான, GPT-4ஐ கண்டு வியந்தவர்களை விட அஞ்சியவர்களே அதிகம். இதனால் GPT-4 தொழில் நுட்பத்தால் சமூகத்திற்கும் மக்களுக்கும் ஏற்படும் நன்மைகளை ஆய்வு செய்து, அதைப் பற்றிய ஒரு முடிவுக்கு வரும்வரை, இந்த தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எந்த முயற்சியையும் அடுத்த ஆறு மாதத்திற்கு மேற்கொள்ளக்கூடாது என, ஒரு பெட்டிஷன் டெக் வல்லுனர்களுக்கு இடையில் கையெழுத்தானது. 

இந்த பெட்டிஷனில் டெஸ்லாவின் நிறுவனரான 'எலான் மாஸ்க்' மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர்களில் ஒருவரான 'ஸ்டீவ் வாஸ்னியாக்' என இருவரும் கையெழுத்துள்ளனர். மேலும் இதில் Stuart Russell-ம் கையெழுத்துட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் AI தொழில்நுட்பம் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும் எனக் கூறவில்லை. செயற்கை நுண்ணறிவு சார்ந்த விஷயங்களில், பாதுகாப்பான டெக் டெவலப்மெண்டை உறுதி செய்ய வேண்டும், மற்றும் அவற்றுக்கான நியாயமான வழிகாட்டுதல்கள் கட்டாயம் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். 

Ai தொழில்நுட்பமானது மனிதர்களுக்கு இணையாக யோசிக்கும் திறன் கொண்டிருப்பதால், இதன் வளர்ச்சியானது பல கோடி மக்களின் பணிகளைத் திருடி அவர்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com