இந்தியாவில் தினசரி ஐந்து கோடிக்கும் அதிகமானோர் கூகுள் மேப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
முன் அனுபவமோ, அறிமுகமோ இல்லாத இடத்தில் கூட இன்று எளிதில் செல்ல முடிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் கூகுள் மேப். கூகுள் மேப்பின் உதவியை கொண்டே இன்று பெரும்பான்மையான பயணங்கள் அமைகின்றன. இவ்வாறு இந்தியாவில் கூகுள் மேப் பயனாளிகளின் உடைய எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கூகுள் மேப் நிறுவனத்தின் துணைத் தலைவர் மரியம் கார்த்திக் டேனியல் தெரிவித்திருப்பது. உலகில் கூகுள் மேப்பை அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா உருவெடுத்து இருக்கிறது. தினசரி 6 கோடி மக்கள் கூகுள் மேப்பில் ஆக்டிவாக இருக்கின்றனர். 5 கோடி பேர் பல்வேறு மொழிகளில் கூகுள் மேப்பில் தேடல்களை முன் வைக்கின்றனர். இவ்வாறு இந்தியாவில் மட்டும் கூகுள் மேப் தினசரி 2.5 பில்லியன் கிலோமீட்டர் தொலைவிற்கான பாதைகளை பயனாளர்களுக்கு காட்டுகிறது.
இந்தியாவில் கூகுள் மேப் உடைய வளர்ச்சிக்கு பயனாளர்களும் முக்கிய பங்கை செலுத்துகின்றனர். பயனாளர்களின் மூலமே பல்வேறு விதமான தகவல்களை கூகுள் மேப் உடனுக்குடன் பெறுகிறது. குறிப்பாக ஸ்டார் ரேட்டிங், புகைப்படங்கள், முகவரிகள், சாலை பராமரிப்பு, மூடப்பட்டுள்ள சாலைகளின் விவரங்கள், போக்குவரத்து நெரிசல்கள் உள்ளிட்ட உடனடி அப்டேட்களை வழங்க பயனாளர்கள் முக்கிய அங்கமாக இருக்கின்றனர். இவ்வாறு பயனாளர்கள் தரும் தகவலை அடிப்படையாகக் கொண்டு கூகுள் நிறுவனம் சிறப்பான செயலியாக முன்னேறி வருகிறது.
இந்திய பயனாளர்களின் கூடுதல் நலம் கருதி வரும் ஜனவரி மாதம் முதல் கூகுள் மேப்பில் கூடுதல் அப்டேட்ஸ் வெளியிடப்பட இருக்கின்றன. இவ்வாறு லைன்ஸ், லவ் யூ, அட்ரஸ் டெஸ்கிரிப்டர், வேர் இஸ் மை ட்ரெயின் அப்ளிகேஷன், எரிபொருள் நிலையம் ஆகிய அப்டேட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் கூகுள் மேப் மேலும் விரிவடையும் என்று கூறுகின்றனர்.