இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சமூக ஊடமாக திகழ்வது இன்ஸ்டாகிராம். குறிப்பாக 2கே கிட்ஸ்களுடைய முக்கிய விளையாட்டு களமே இன்ஸ்டாகிராம் தான் என்று சொல்லும் அளவிற்கு முழுக்க முழுக்க இளைஞர்களை ஆக்கிரமித்து இருக்கிறது இன்ஸ்டாகிராம். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இன்ஸ்டாகிராம் பயனாளர்களினுடைய எண்ணிக்கையை கருதி மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ச்சியாக இணைக்க ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் ஜென் இசட் பயனாளர்களின் வசதிக்காக கூடுதல் அம்சங்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது. இவ்வாறு இன்ஸ்டாகிராம் வெளியிடக்கூடிய புதிய அம்சங்களின் விவரங்களை குறிப்பிட்டு உள்ளது. ஆடியோ நோட்ஸ் அம்சம் புதிதாக இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தகவல்களை ஆடியோ வடிவில் பதிவு செய்து பிறருக்கு தெரிவிக்க வாய்ப்பு ஏற்படும். செல்ஃபி வீடியோ நோட்ஸ் அம்சத்தையும் அறிமுகப்படுத்த இருக்கிறது.
மேலும் பர்த்டே இவக்ட்ஸ் அம்சத்தையும் அறிமுகப்படுத்த இருக்கிறது இன்ஸ்டாகிராம். இதன் மூலம் நீங்கள் பின்தொடர்பவர்களின் பிறந்தநாளை அறிந்து கொள்வதோடு, அவர்களுக்கு வாழ்த்து கூறவும் முடியும். இதன் மூலம் உறவு மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாது கூடுதலாக பல அம்சங்களும் இணைக்கப்பட உள்ளது. அதற்கான சோதனை தற்போது நடைபெற்று வருவதாகவும், இன்னும் சில தினங்களில் இந்த புதிய அம்சங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.