விண்வெளி உடை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

Space Suits
Space Suits
Published on

நாம் அனைவருக்கும் விண்வெளியில் பயன்படுத்தும் உடை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுவது இயற்கையே.

சந்திரனின் காலடி வைத்த முதல் நபர் நீல் ஆம்ஸ்ட்ராங். இந்த சாதனைக்கு அவரது விண்வெளி உடை முக்கிய பங்கு வகித்தது. இந்த விண்வெளி உடை 'எக்ஸ்ட்ரா வெஹிகுலர் மொபிலிட்டி யூனிட்' ( EMU) என்றும் அழைக்கப்படுகிறது. விண்வெளி பயணத்தில் முக்கிய பங்காற்றும் விண்வெளி உடை ( ஸ்பேஸ் சூட்) பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.

soviet yuri gagarin space Suit
soviet yuri gagarin space Suit
  • 1961 ஆம் ஆண்டு சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் அணிந்த உடை விண்வெளியில் மனிதன் அணிந்த முதல் ஸ்பேஸ்சூட் ஆகும். 

  • ஸ்பேஸ் சூட்கள் விண்வெளியில் உள்ள தீவிர வெப்ப நிலையில் இருந்து விண்வெளி வீரர்களை பாதுகாக்கின்றன. அவை -250 டிகிரி பாரன்ஹீட் குளிர் முதல் அதிகபட்சமாக +250 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் வரை தாங்கும் வல்லமை கொண்டவை. 

  • உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தவும், விண்வெளி பயணத்தின் போது கூடுதல் வெப்பத்தை அகற்றவும், குழாய்கள் வழியாக குளிர்ந்த நீர் விண்வெளி வீரர்கள் உடலில் படும்படி உடை அமைப்பு உள்ளது. இது பொதுவாக பல மணி நேரம் நீடித்த செயல்முறை ஆகும். ஆடையில் உள்ள துவாரங்கள் வழியாக விண்வெளி வீரரின் உடலில் இருந்து வியர்வை வெளியேற்றும் அமைப்பு உள்ளது. 

  • விண்வெளி வீரர்களின் ஹெல்மெட்டுகள் பாலிகார்பனேட்டால் ஆனவை. அவை குண்டு தொலைக்காத கண்ணாடியால் உருவாக்கப்பட்டு இருக்கும். 

  • ஒரு ஸ்பேஸ்வாக் சூட் நம்ப முடியாத அளவிற்கு கனமானது. சுமார் 280 பவுண்ட்(127 கிலோ) எடையை கொண்டது. ஆனால் புவி ஈர்ப்பு விசை அற்ற விண்வெளியில் அது வெறும் 26 கிலோ எடை (வெறும் 57 பவுண்டுகள்) மட்டுமே இருக்கும்.

  • பல வருடங்களாக விண்வெளி உடை பல மாற்றங்களை அடைந்து, தற்போது வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. ஏனெனில் அது பூமியில் இருப்பதைப் போலவே விண்வெளியிலும் வெப்பத்தை பிரதிபலிக்கிறது. நாசா ஸ்பேஸ் சூட்டின் விலை தோராயமாக ரூபாய்.92 கோடி முதல் ரூபாய்.114 கோடி வரை இருக்கும். 

  • ஒரு விண்வெளி வீரர் ஒரு உதவியாளரின் உதவியுடன் விண்வெளி உடைய அணிய 15 நிமிடங்கள் ஆகும். ஸ்பேஸ் சூட் போடுவது 'டான்னிங்' என்றும் அதை அகற்றும் முறை 'டாபிங்' என்றும் அழைக்கப்படுகிறது. 

  • ஸ்பேஸ் சூட் 16 அடுக்குகளைக் கொண்ட 12 செயற்கைப் பொருட்களின் கலவையால் உருவானது. உட்புற அடுக்கு 'நைலான் டிரிகோட்' பொருட்களால் ஆனது. அடுத்த அடுக்கு 'ஸ்பான்டெக்ஸைப்’ என்ற மீள் பாலிமரால் உருவானது. இதை தொடர்ந்து 'யூரேதேன் 'என்ற அடுக்கும் உள்ளது. 

  • விண்வெளி வீரர்கள் நீண்ட காலத்திற்கு விண்வெளியில் இருக்க வேண்டும். எனவே அவர்கள் சிறுநீரை வெளியேற்றுவதற்காக தங்கள் ஸ்பேஸ் சூட்களில் உள் பைகள் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்த ஒரு சிறுகோள் போதும், பூமியில் உள்ள அனைவரும் கோடீஸ்வரர் ஆகலாம்!
Space Suits
  • ஸ்பேஸ் சூட் ஆனது ஆக்சிஜன் வழங்குதல், கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுதல், காற்றோட்ட விசிறி, தகவல் தொடர்பு சாதனங்கள், மற்றும் மின்சார சக்தி, விண்வெளியின் அதிசயங்களை பதிவு செய்வதற்கான கேமரா, குடிநீருக்காக தனியாக ஒரு  அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

  • விண்வெளி வீரர்களை தூசியின் தாக்கங்களிலிருந்தும், விண்வெளி கதிர்வீச்சுக்களில் இருந்தும், இந்த உடைகள் பாதுகாக்கின்றன. விண்வெளியின் ஒரு தூசியின் தாக்குதல் கூட அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 

  • இந்த உடையில் 7 மணி நேரம் வரை ஆக்சிஜனை சேமிக்க முடியும். மேலும் விண்வெளி உடையில் இரண்டாம் நிலை ஆக்சிஜன் தொட்டியும் உள்ளது. இது விண்வெளி வீரர்களுக்கு 30 நிமிட அவசர கால ஆக்சிஜனை வழங்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com