ஜூலை மாதத்தில் நிகழும் சுவாரசிய வானிலை நிகழ்வுகள்!

Sky
Sky

பல வானிலை மாற்றங்களும் நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழத்தான் செய்கின்றன. அந்தவகையில் இந்த மாதம் என்னென்ன வானிலை நிகழ்வுகள் நிகழவுள்ளன என்பதைப் பார்ப்போம்.

1. Delta Aquarida Meteor Shower:

Delta Aquarida Meteor Shower
Delta Aquarida Meteor Shower

தெற்கு டெல்டா அக்வாரிட்ஸ் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் இறுதியிலிருந்து ஆகஸ்ட் நடுப்பகுதி வரை காணக்கூடிய விண்கல் மழையாகும். வரும் ஜுலை 28 இரவும், 29 காலையும் டெல்டா அக்வாரிட்ஸ் எனப்படும் ஏரிகல் பொழியும் நிகழ்வை விண்ணில் நம்மால் காண முடியும். ஆனால் இந்த குறிப்பிட்ட இரண்டு தினங்களில் [ஜூலை 28 & 29] அதிகமாக பொழிவு இருக்கும்.

2. Buck Moon:

Buck Moon:
Buck Moon

ஜூலை 21ம் தேதி நிகழும் இந்த நிகழ்வினால், வானே ஜொலிக்கும் அளவிற்கு முழு நிலவு தோன்றும். அன்று அதிகாலை 6.17 மணி அளவில் பக் நிலா தனது முழு பிரகாசத்தை வெளிப்படுத்தி மறையும்.

3. Mercury Elongation:

Mercury Elongation
Mercury Elongation

சூரிய மண்டலத்தின் முதன்மை கோளாகவும், மிகவும் உட்புறத்தில் இருக்கும் கோளாகவும் உள்ளது மெர்க்குரி. உட்புறம் இருக்கும் காரணத்தினால், பூமியிலிருந்து பார்க்கும்போது அது இருப்பது தெரியாது. ஆனால், ஜூலை 12ம் தேதி மெர்க்குரி கிரகம் சூரியனிலிருந்து கிழக்குப்புறமாக அதிக தொலைவுக்கு செல்லும். சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு இந்த நிகழ்வை கருவிகளின் உதவியுடன் நம்மால் வானில் கவனிக்க முடியும்.

4. Aphelion:

Aphelion
Aphelion

ஜூலை 6ம் தேதி பூமியும் சூரியனும் நீள் சுற்றுவட்டப்பாதையில் ஒன்றுக்கொன்று மிகவும் தொலைவில் இருக்கும். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இத்தனை அதிக தொலைவில் பூமியும் சூரியனும் இருக்கும். இதனை Aphelion என்று கூறுவார்கள்.

5. No moon Day:

No moon Day
No moon Day

ஜூலை 5ம் தேதி வானில் நிலவு தோன்றாது. ஆனால், தூர கிரகங்களின் ஒளி நட்சத்திரங்கள், அதிகமாக பிரகாசித்து காண்போர் மனதைப் பறிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com