Internet of Things (IoT) என்ற ஒரு விஷயம் நாம் பல தொழில்நுட்பங்களுடன் ஒரே சமயத்தில் தொடர்பு கொள்ளும் முறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையே முற்றிலும் மாறப்போகிறது எனலாம். ஸ்மார்ட் ஹோம்கள் முதல் தானியங்கி கார்கள் வரை, IoT ஆனது டிஜிட்டல் மற்றும் இயற்பியல் உலகத்தை ஒருங்கிணைத்து நம் வாழ்க்கையை மேலும் வசதியாக வாழ வழிவகை செய்துள்ளது.
IoT நாம் வாழும் முறையை எவ்வாறு மாற்றுகிறது தெரியுமா?
1. ஸ்மார்ட் ஹோம்கள் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்கள்: இந்தத் தொழில்நுட்பத்தின் குறிப்பிட்டதக்க தாக்கங்களில் ஒன்று ஸ்மார்ட் ஹோம்களின் தோற்றமாகும். இதன் மூலமாக லைட்டிங் சிஸ்டம், பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் வீட்டில் இயக்கும் சாதனங்கள் போன்றவற்றை ஸ்மார்ட்போன் அல்லது வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் கட்டுப்படுத்தலாம். இதன் மூலமாக ஆட்டோமேஷன் மற்றும் இணைப்பு செயல்திறன் மேம்பட்டுள்ளது. மேலும் வீட்டில் பாதுகாப்பை மேம்படுத்தி நம் பணிகளை சிறப்பாக நிர்வகிக்கும் வசதியையும் வழங்கியுள்ளது.
2. உடல்நலம் மற்றும் அணியக்கூடிய சாதனங்கள்: IoT சுகாதாரத் துறையில் புரட்சியை ஏற்படுத்திரள்ளது. தொலைதூரத்தில் இருந்து நோயாளியை கண்காணிப்பதற்கும், ஃபிட்னெஸ் பேண்ட், ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற அணியக்கூடிய சாதனங்களில் உடல் நலம் சார்ந்த தரவுகளை உடனடியாக சேகரித்து சிறப்பாக செயல்படுகிறது. இதன் மூலமாக நம் உடலில் ஏற்படும் முக்கிய அறிகுறிகளை உடனடியாகக் கண்காணித்து, சுகாதாரத்தை மேம்படுத்த முடியும்.
3. போக்குவரத்து மற்றும் ஸ்மார்ட் நகரங்கள்: ஸ்மார்ட் சிட்டி உருவாக்கம் மற்றும் போக்குவரத்து துறையில் IoT பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்சார்கள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள், இணைக்கப்பட்ட வாகனங்கள் மூலமாக சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தலாம். ஸ்மார்ட் நகரங்களில் கழிவு மேலாண்மை, ஆற்றல் தேவை போன்றவற்றை முன்கூட்டியே கணித்து, சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்க IoT பயன்படுகிறது.
4. விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு: விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதில் IoT முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம். சென்சார்களைப் பயன்படுத்தி மண்ணின் ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் காற்றோட்டம் ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும். இது விவசாயிகளுக்கு நீர்ப்பாசனம், மற்றும் உரமிடுதல் பற்றிய தரவு சார்ந்த முடிவுகளை எடுக்க உதவும். சென்சார்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள், பரந்த விவசாய நிலங்களை ஆய்வு செய்து, பயிர் சுகாதாரப் பிரச்சனைகளைக் கண்டறிய பெரிதளவில் உதவும். IoT மூலமாக காற்றின் தரம், நீர் மாசுபாடு மற்றும் காலநிலை நிலைமைகள் பற்றிய தகவல்களை சேகரித்து, சுற்றுச்சூழலை திறம்பட கண்காணிக்க முடியும்.
5. தொழில்துறை ஆட்டோமேஷன்: ஆட்டோமேஷன் நடைமுறைகளால் தொழில்துறை செயல்முறைகள் முற்றிலும் மாறியுள்ளன. சென்சார்களின் உதவியுடன் உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் இருந்து தரவுகளை நேரடியாக சேகரிக்கலாம். இதன் மூலமாக விலையுயர்ந்த இயந்திர பாதிப்புகளைத் தடுக்க முடியும். மேலும் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செயல்முறை மேம்படுவதால், கழிவுகளைக் குறைத்து உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க உதவுகிறது.