ஆண்ட்ராய்டு 14OSஅதிரடி அறிமுகம்! கலக்குதே கூகுள் நிறுவனம்!

ஆண்ட்ராய்டு 14OSஅதிரடி அறிமுகம்! கலக்குதே கூகுள் நிறுவனம்!

லகிலேயே அதிக மக்களால் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்டு OS கொண்ட திறன்பேசிகள் தான். அதுமட்டுமின்றி தொலைக்காட்சிகள், மகிழுந்துகள் மற்றும் பலவிதமான கைக்கடிகாரங்களிலும் இந்த ஆண்ட்ராய்டு கட்டமைப்பு தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. 

OpenAi நிறுவனத்தின் ChatGPT செயற்கை நுண்ணறிவுக்கு எதிராக, கூகுள் நிறுவனம் கொண்டு வந்த, Bard AI சேட்பாட் அறிமுக நிகழ்வில் ஏற்பட்ட தவறால், அந்நிறுவனத்திற்கு 100 பில்லியன் டாலர்களுக்கும் மேலான இழப்பு ஏற்பட்டது. இதைப் பெரிதாக பொருட்படுத்தாமல், தனது ஆப்பரேட்டிங் சிஸ்டமின் அடுத்த பதிப்பான ஆண்ட்ராய்டு 14-ஐ கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 

இதனை அவர்கள் First developer preview version-1 என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் அடுத்தடுத்து Preview Version-2, Preview Version-3 என்று ஒவ்வொரு கட்டமாகப் பிரிப்பார்கள். அடுத்ததாக இதன் Beta Version மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்பட்டும்.  இறுதியாக இந்த வருடக் கடைசியில், அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில், Android 14 Stable Version மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. 

ஆண்ட்ராய்டு 14 OS-ல் இருக்கும் சிறப்பம்சங்களைத் தற்போது உறுதியாகக் கூற முடியாது. அதனுடைய ஸ்டேபில் வெர்ஷன் வெளிவந்த பின்னரே சொல்ல முடியும். புதியதாக ஒவ்வொரு ஆண்ட்ராய்டு OS வெளிவரும் போதும் அதிலுள்ள பாதுகாப்பு பற்றி பல கேள்விகள் எழும்பும். இதற்கு பதில் அளிக்கும் வகையில், ஆண்ட்ராய்டு 14 OS-ல் பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இயங்கக்கூடிய செயலிகளை நீங்கள் நிறுவ முடியாது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 6 பதிப்புக்கு கீழே உள்ள செயலிகளை பயன்படுத்த முடியாது. 

எனவே இதனுடைய பாதுகாப்புத் தன்மை ஆண்ட்ராய்டு 12,13-ஐ விட சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். தொடக்கத்தில் இந்த முதல் Preview Version-ஐ கூகுளின் சொந்தத் தயாரிப்புகளான Pixel 7 Pro, Pixel 7, Pixel 6a, Pixel 6 Pro, Pixel 6, Pixel 5a 5G, Pixel 5 மற்றும் Pixel 4a 5G திறன் பேசிகளில் பயன்படுத்தலாம் என்று கூகுள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com