உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் மிக முக்கிய தொலைத்தொடர்பு சாதனங்களில் ஒன்றாக உள்ள ஜிமெயிலில் தற்போது இமோஜி ரியாக்சன்களை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
கேள்வியோ, பதிலோ அல்லது கருத்து பரிமாற்றமோ எதுவாக இருந்தாலும் பேசுவதற்கு மாற்றாக மெசேஜ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு மெசேஜை டைப் செய்வதற்கு மாற்றாக ரியாக்சனை வெளிப்படுத்தும் படங்களை பயன்படுத்தும் முறையான இமோஜி பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற பல்வேறு வகையான சமூக ஊடகங்களில் டைப் செய்து கருத்தை வெளிப்படுத்துவதற்கு பதிலாக இமேஜ் அனுப்பி கருத்துக்களை வெளிப்படுத்தும் இமோஜி முறை அதிகம் பயனாளர்களை கவர்ந்துள்ளது.
இதனால் இமோஜி ரியாக்ஷன்கள் பல நூற்றுக்கணக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சொல்ல வரும் கருத்துக்களை எளிதாக வெளிப்படுத்த முடிகிறது. மேலும் இவை மொழிகளைக் கடந்த பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இந்த நிலையில் ஜிமெயில் நிறுவனமும் இமேஜ் ரியாக்சன்களை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது. ஒருவருக்கு ஜிமெயில் வழியாக இமோஜி ரியாக்சன் வேலை பயன்படுத்தி ரிப்ளை செய்ய முடியும். தற்போது இந்த முறை சில ஆண்ட்ராய்டு போன்களில் சோதனை முறையில் துவங்கப்பட்டுள்ளது. வரக்கூடிய காலங்களில் முழுமையாக இமோஜை பயன்படுத்தி ரிப்ளை செய்ய முடியும். மேலும் தற்போது ஒரு ரிப்ளை பதிவில் 50 இமோஜிகள் வரை பயன்படுத்த முடியும்.
ஜிமெயில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் முக்கிய தொலைத் தொடர்பு சாதனமாக இருக்கிறது. இந்த நிலையில் தகவல்களை பரிமாற்ற மொழி மிகப்பெரிய தடையாக இருந்து வரக்கூடிய நிலையில் இமோஜி முறை மொழிகளற்ற கருத்துப் பரிமாற்றத்திற்கான வழியை விரிவடைய செய்திருக்கிறது.