ஐபோன் 15 சீரிஸ் இன்று வெளியீடு! விலை என்ன தெரியுமா? 

iPhone 15
iPhone 15
Published on

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் சாதனம் பற்றி அறிவிப்பை, இன்று நடைபெறும் Wonderlust என்ற வருடாந்திர நிகழ்வில் அறிவிக்கவுள்ளது. இதில் முன்பு வெளியான ஐபோன் மாடல்களை விட புதிய அம்சங்கள் இருப்பதால் கூடுதல் விலைக்கு விற்கப்பட வாய்ப்புள்ளது என வல்லுனர்கள் கூறுகின்றனர். 

எனவே இந்த புதிய வகை ஐபோன்கள் விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. வழக்கம்போல அவர்களின் முந்தைய சாதனங்கள் போலவே ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் என நான்கு புதிய மாடல்களில் இது வெளிவர உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ப்ரோ மாடல்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு வெளிவந்த ஐபோன் 14 மாடலைவிட விலை சற்று அதிகமாக இருக்கும். பலர் ஐபோன் 15ன் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்த்த நேரத்தில், இது கூடுதல் விலைக்கு விற்கப்படபோகிறது என்ற செய்தி பட்ஜெட் மொபைல் பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

ஐபோன் 15ல் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டதனாலேயே இந்த விலையேற்றம் எனச் சொல்கின்றனர். இந்த போன்கள் டைட்டானியம் கட்டமைப்பை கொண்டிருக்கும். கடந்த ஆண்டு வெளியான ஐபோன்களை விட இது ப்ரீமியம் லுக்கைக் கொடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதில் செய்யப்பட்டிருக்கும் பெரிய மாற்றமாக ப்ராசசர் இருக்கலாம். இந்த ஐபோன் 15ல் முதன் முறையாக USB-C சார்ஜிங் போர்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக தரவுகளை வேகமாக பரிமாற்றலாம். பல ஆண்டுகளாகவே ஐபோன் சாதனங்களின் கேமராவில் டெலிபோட்டோ லென்ஸ் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ஐபோன் 15ல் இந்த ஆண்டு பெரிஸ்கோப் லென்ஸ் பொருத்தப்பட்டு வருகிறது. 

ஐபோன் 15 மாடல்களில் பல சிறப்பம்சங்கள் இருப்பதனாலேயே ஐபோன் 14 மாடல்களை விட இது 100 டாலர்கள் அதிகமாக இருக்கும் என்கின்றனர். அதாவது ஐபோன் 14ன் விலை 799 டாலர்கள் என்றால், ஐபோன் 15ன் விலை 899 டாலர்கள் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். இதன் விலை சுமார் 100 முதல் 200 டாலர்கள் வரை அதிகரிக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com