கூடுதல் கதிர்வீச்சை வெளியிடும் iphone!

iPhone
iPhone

கடந்த 12ம் தேதி தங்களின் புது சீரிஸ் மாடலான ஐபோன் 15ஐ ஆப்பிள் நிறுவனம் உலகமெங்கும் அறிமுகப்படுத்தியது. இதில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஆப்பிள் சாதனம் மீது ஒரு புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது பிரான்ஸ். 

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் 12 வெளியிடும் கதிர்வீச்சின் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக பிரான்ஸ் நாட்டு ரேடியோ அலைவரிசைகளை நிர்வகிக்கும் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. இவர்களின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தற்போது பிரான்ஸ் நாட்டில் ஐபோன் 12 விற்பனையை நிறுத்தும்படி ஆப்பிள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டின் கண்காணிப்பு அமைப்பு உத்தரவிட்டிருக்கிறது. 

ஆப்பிள் நிறுவனத்தின் மீது பிரான்ஸ் நாடு இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதைத் தொடர்ந்து ஜெர்மனியும் இதேபோன்ற நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டு வருகிறது. ஐபோன் 12 சாதனத்தின் விற்பனையை ஸ்பெயின் நாட்டிலும் நிறுத்துவது குறித்த ஆலோசனைகள் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் அதிகப்படியாக ஐரோப்பிய ஒன்றியத்திலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே ஐரோப்பிய நாடுகளின் இந்த முடிவால் ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. 

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு கிலோவுக்கு 4.0W SAR அளவையே அதிகபட்ச அளவாக நிர்ணயித்திருக்கிறது. ஆனால் ஆப்பிள் ஐபோன் 12 SAR அளவு கிலோவுக்கு 5.74W ஆகும். இதன் காரணமாகவே இந்த சாதனத்தை தடை செய்ய வேண்டும் எனச் சொல்கிறது பிரான்சின் அலைவரிசை கண்காணிப்பு அமைப்பு. ஆனால் இதற்கு பதிலளித்த ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 12 சாதனத்தின் SAR அளவு அனுமதித்த அளவில்தான் இருப்பதாகக் கூறி அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளது. 

இதற்கு முன்னர் இதே போல 42 முறை இந்த குறிப்பிட்ட ஸ்மார்ட் போனின் SAR அளவு அதிகமாக இருப்பதாகக் கூறி பிரான்ஸ் தடை செய்தது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com