உங்க ஸ்மார்ட் ஃபோன் பழசா போச்சா? அப்போ இப்படி செய்யுங்க…

உங்க ஸ்மார்ட் ஃபோன் பழசா போச்சா? அப்போ இப்படி செய்யுங்க…

வ்வொரு நாளும் செல்போன்களின் செயல்பாடு மற்றும் வடிவமைப்புகள் சிறப்பாக மாறிக்கொண்டே வருகின்றன. ஆறு மாதங்களிலேயே நம் ஸ்மார்ட்போனின்  அம்சங்கள் பழயனவாக மாறிவிடுகின்றன. இதற்கு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு இடையே உள்ள போட்டிதான் காரணம். 

பல்வேறு காரணங்களுக்காக அனைவரும் பழைய ஸ்மார்ட்போனை ஒதுக்கிவிட்டு புதிய போன் வாங்குகிறார்கள். அவ்வப்போது ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் புதிய சாதனங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள். இது தவிர தற்போது 5G தொழில்நுட்பம் வந்து விட்டதால், அதை ஏற்றுக் கொள்ளும் வகையான ஸ்மார்ட் ஃபோனுக்கு மாறுகிறார்கள். 

சிலர் ஸ்மார்ட்போன் சரியாக வேலை செய்யவில்லை என்று அதை நிராகரிக்கிறார்கள். சில நபர்கள் உடைந்த போனை பின்னர் சரிசெய்து கொள்ளலாம் என்று ஒதுக்கி வைக்கிறார்கள். இதுபோல் வீட்டில் ஒதுக்கி வைத்திருக்கும் பழைய ஸ்மார்ட்போன்கள் அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. 

நீங்கள் கவனக்குறைவாக நிராகரிக்கும் ஸ்மார்ட்போன் விரைவில் காலாவதியான எலக்ட்ரிக் குப்பையாக மாறிவிடுகிறது. பின்னர் நீங்கள் சேகரிக்கும் கழிவுப் பொருட்களுடன் இந்த உலோக குப்பையும் சேர்ந்து கொள்கிறது. இனி உங்கள் பழைய தொலைபேசியை குப்பையில் வீச வேண்டாம். 

உங்கள் பழைய போனில் பேட்டரி தான் ஒரே பிரச்சினையாக இருக்கலாம். அல்லது ஸ்பீக்கர், மைக், டிஸ்ப்ளே போன்றவை பிரச்சினையாக இருக்கலாம். இவ்வாறு சிறு சிறு பிரச்சனைகளுக்காக ஒதுக்கப் பட்டிருக்கும் ஸ்மார்ட் ஃபோனை எப்படி நமக்குத் தேவையான வகையில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.  ஸ்மார்ட்போனை பயன்படுத்தவே முடியாது அதை அப்புறப்படுத்ததான் வேண்டும்.  என்று நினைப்பவர்கள் கூட அதை எப்படி முறையாக அப்புறப்படுத்தலாம் என்பதையாவது இந்த பதிவு மூலம் கற்றுக் கொள்ளுங்கள். 

  1. சிறு சிறு பிரச்சனைகளால் சரியாக வேலை செய்யாத ஸ்மார்ட்போனை, உங்களுடைய ஸ்டோரேஜ் டிவைஸாக பயன்படுத்தலாம். உங்களின் புதிய ஸ்மார்ட் போனில் அதிகமாக இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் போட்டோஸ், வீடியோஸ், சில தரவுகள் போன்றவற்றை பழைய போனில் பாதுகாப்பாக சேமிக்கலாம். 

  2. னி பயன்படுத்தவே முடியாது என்ற வகையில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோனை குப்பையில் வீசுவதற்கு பதிலாக, அதை வாங்குவதற்காகவே இருக்கும் சில வலைதளங்களில் விற்று விடுவது நல்லது. அவர்களிடம் இணையத்தில் பதிவு செய்தால் உங்கள் வீட்டுக்கே வந்து வாங்கிக்கொள்வார்கள். இதற்காக உங்களுக்கு பணமும் கொடுக்கப்படும். 

  3. நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்கும்போது எக்ஸ்சேஞ்ச் முறையில் பழைய ஸ்மார்ட் போனை விற்று விடலாம். விழாக்காலங்களில் இதை நீங்கள் செய்தால் உங்களுக்கு அதிகப்படியான சலுகைகளும் கிடைக்கும். 

  4. ல்லது உங்களுக்குத் தெரிந்த வட்டாரங்களுக்குள் பழைய போனின் தேவை இருக்கிறதா என்பதை அறிந்துகொண்டு, அவர்களுக்கு நன்கொடையாகவோ அல்லது சிறிது பணம் பெற்றுக்கொண்டோ கொடுத்து விடலாம். 

மேற்கூறியவற்றை உங்கள் ஸ்மார்ட்ஃபோன் துருப்பிடித்து, அதிகப்படியான தூசி படிந்து இனி பயன்படுத்தவே முடியாது என்ற நிலைக்கு செல்வதற்கு முன்பாக செய்து விடுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com