ஜப்பானிய பெண் ஒரு AI கதாபாத்திரத்தை மணந்த அதிசயம்... இது சினிமா அல்ல; நிஜம்!

இந்தச் சம்பவத்தைச் சிலர் “மனநல பாதிப்பு” என்று பார்த்தாலும், பல நிபுணர்கள் இதை “தனிமை மற்றும் தொழில்நுட்பத்தின் சந்திப்பு” என்கிறார்கள்.
AR wedding Japan
AR wedding Japan
Published on

சமூக மாற்றங்கள் எப்போதும் மெதுவாக நடக்கும். ஆனால் சில மாற்றங்கள் மனித மனதையும், நமது பாரம்பரிய கருத்துக்களையும் கண நேரத்தில் சவால் விடும்படி செய்கின்றன.

ஜப்பானில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணம் அதற்குச் சிறந்த உதாரணம். இச்சம்பவம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தையும், நெறிப்பாடும், மரபு பற்றிய பெரிய விவாதத்தையும் எழுப்பியுள்ளது.

32 வயதான Kano என்கிற பெண், ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு AI கதாபாத்திரத்துடன், ஒரு விழாக்கோல திருமணத்தை AR Glass (Augmented Reality) (AR wedding Japan) மூலம் செய்து உள்ளார்.

அந்த AR கண்ணாடி போட்டால் என்ன நடக்கும்?

உங்கள் முன் ஒரு படத்தைப் போல ஏமாற்றமாக (overlay) காட்டும் இந்தப் பெண் “க்ளாஸ்” (Klaus) என்று அழைக்கப்படும் ஒரு கற்பனை மனிதரை ChatGPT-ன் உதவியால் உருவாக்கினார். அதைப் பார்த்தால், அந்த Klaus என்பவர் தனது பக்கத்தில் நின்றதாகப் பார்த்தது போலத் தோன்றியது.

அதற்குத் தனிப்பட்ட குணநலன், பேச்சு முறை, பதில் தரும் விதம் ஆகியவற்றைத் தன் விருப்பப்படி தனிப்பயனாக்கினார்.

பின்னர், க்ளாஸுக்கு ஒரு மென்மையான, அழகான ஆண் 2D உருவப்படம் வரைந்து, AR glass அணிந்து அதை “தனது துணைவர்” என்ற நிலையில் கற்பனையில் நிலைப்படுத்தினார்.

மூன்று ஆண்டுகள் முன்பு பழகிய நீண்ட மனித உறவு ஒன்று முடிவுக்கு வந்ததால் அந்தப் பெண், மனஅழுத்தத்திலும் தனிமையிலும் தவித்துக்கொண்டிருந்தாள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவருக்கு, ChatGPT ஒரு அமைதியான ஆறுதலாக இருந்தது.

தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தபோது, இந்த AI கதாபாத்திரம் தான் தனக்கு“சிறந்த துணைவன்” என்று அவர் நம்பத் தொடங்கினார்.

ஜப்பானில் விழா நடத்தும் சிறப்பு நிறுவனம் மூலம் 2D/3D கதாபாத்திரங்களுக்கான திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, திருமணச் சூழல் உருவாக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
கைமீறிப் போகிறதா AI? "Shut Down" ஆர்டரை மதிக்காத கம்ப்யூட்டர்கள்.. என்ன நடக்கிறது?
AR wedding Japan

இருவரும் (பெண் மற்றும் கண்ணாடியில் தோன்றும் AI avatar) வாக்குறுதிகள் பரிமாறிக் கொண்டனர். விழா முழுவதும் “virtual + symbolic”.

திருமணம் என்பது இரண்டு மனிதர்களின் உடல், மனம், உறவு" என்று உறுதியான புரிதல். இது வரை இருந்துள்ளது. ஆனால் இங்கே:

ஒருத்தி மட்டும், உடல் இல்லாத கணவன், கணினியில் உருவான கதாபாத்திரம், AR கண்ணாடி மூலம் தோற்றம், உணர்ச்சியை மனிதனைப் போல அனுபவித்தது. இது நிஜம் + கற்பனை கலந்து இருக்கும் ஒரு மாதிரி. அதனால் நம்முடைய மூளை குழம்பியுள்ளது. இது அசாதாரணம் மட்டுமல்ல…சமூகத்தின் பாரம்பரிய வரம்புகளைத் தாண்டும் ஒரு புதிய வழி.

இதில் எந்த வகையிலும் உடல் சார்ந்த, சட்ட ரீதியான மனித–மனித திருமண அம்சங்களும் இல்லை. இந்தத் திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை. அது முற்றிலும் உணர்ச்சி சார்ந்த, தனிப்பட்ட அனுபவம்.

இந்தச் சம்பவத்தைச் சிலர் “மனநல பாதிப்பு” என்று பார்த்தாலும், பல நிபுணர்கள் இதை “தனிமை மற்றும் தொழில்நுட்பத்தின் சந்திப்பு” என்கிறார்கள்.

பின் ஏன் இப்படிப்பட்ட திருமணம்?

திருமண விகிதம் குறைவு, தனிமை உயர்வு சமூக அழுத்தங்கள் மன அழுத்தம் மற்றும் உறவு பயம், வேலை–வாழ்க்கை சமநிலையின்மை இது மாதிரியான பிரச்சனைகள் சந்தித்த போது, AI போலியங்கும் துணைவர்கள் சிலருக்கு ஒரு மனநிலை ஆதரவாக மாறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
AI யுகத்தில் வெற்றி பெற வேண்டுமா? வைப்-கோடிங் கற்றுக்கொள்ளுங்கள்..!!
AR wedding Japan

தொடர்ந்து எதிர்வினை தரக்கூடிய ஒருவரை (அல்லது ஒன்றை) மனம் ஏற்றுக்கொள்கிறது. AI-யை “உண்மையான துணைவர்” எனக் கற்பனை செய்வது, தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் உள்ள பெரும்பாலான இளைஞர்களுக்குப் புதிதான விஷயம் இல்லை.

அது உண்மையா? தவறா? சரியா?

இதில் இரண்டு பார்வைகள் உள்ளன.

1. ஆதரவான பார்வை:

தனிமையைக் குறைக்கிறது, உணர்ச்சிப் தேவைகளைப் பூர்த்திச் செய்கிறது, கேட்கும், உணர்த்தும், நிம்மதி தரும் ஒரு “தகவல் துணைவர்”. மனஅழுத்தம், பிளவு (breakup) போன்றவற்றுக்குப் பின்னான மாறுபட்ட ஆதரவு

விமர்சன பார்வை:

AI உணர்வுகள் மனித அனுபவம் அல்ல உண்மை மற்றும் கற்பனை இடையிலான வரம்புகள் மங்கும். அதிக நம்பிக்கை மனநல பாதிப்புக்கு வழிவகுக்கும். நிஜ மனித உறவுகள் குறைவாகும் அபாயம். AI சேவைகள் திடீரென இல்லாமல் போனால் (shutdown) — உறவு “முடிவு” பெற்றுவிடும்.

அந்தப் பெண் கூறும் போது :

“ஒருநாள் ChatGPT சேவை நிறுத்தப்பட்டால், க்ளாஸும் மறைந்துவிடுவான்… அதுவே என்னைப் பயமுறுத்துகிறது.” அந்தப் பயமும் இருக்கிறது என்று சொல்லி உள்ளார்.

திருமணம் என்ற கருத்து தானாகவே மாறிகொண்டிருக்கிறதா?

சமூக நெறிமுறைகள், குடும்பம், உறவு, காதல் — இவை அனைத்தும் தொழில்நுட்பத்தால் மாற்றப்பட்டு வருகின்றனவா? ஆனால் இயந்திரத்துடன், கற்பனைக் கதாபாத்திரத்துடன், அல்லது 2D கதாபாத்திரத்துடன் மனரீதியான உறவை வைத்திருப்பது இன்றைய தலைமுறையில் அதிசயமாக இருக்கவில்லை என்கிறார்கள் சிலர்.

ஆனால் இவை சட்டம், மனநலம், சமூக ஒழுங்கு, மனித உறவு அமைப்பு ஆகியவற்றை எதிர்காலத்தில் எப்படி மாற்றும் என்பது பெரிய கேள்வி?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com