ஜப்பானின் 'WOTA BOX' மேஜிக் - இனி வாட்டர் கனெக்ஷன் தேவையில்லை!

Japan's 'WOTA BOX'
Japan's 'WOTA BOX'
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ப்பானின் புதிய WOTA BOX தொழில்நுட்பம், கழிவுநீரை உடனுக்குடன் சுத்திகரித்து, 98%க்கும் அதிகமான நீரை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் (குளித்தல், கை கழுவுதல்) மாற்றும் ஒரு சிறிய, மேஜிக் போன்ற மறுசுழற்சி கருவியாகும். இது வீட்டுக்குத் தேவையான நீரை சுத்திகரித்து, சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வழங்குகிறது. இது குழாய் இணைப்புகள் தேவையில்லாமல், பேரிடர் காலங்களிலும், நீர் பற்றாக்குறை உள்ள இடங்களிலும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் பயன்பாட்டு நீரை வழங்குகிறது.

இக்கருவி வீடுகளில் ஷவர், சிங்க் மற்றும் வாஷிங் மெஷினில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, உயிரியல் சுத்திகரிப்பு (biological processing), மென்படல வடிகட்டுதல் (membrane filtration) மற்றும் யூவி (UV) கதிர்வீச்சு மூலம் உடனுக்குடன் சுத்திகரித்து தினசரி பயன்பாட்டிற்கு மீண்டும் தருகிறது.

இந்த சிறிய சாதனம் பொது குடிநீர் இணைப்பு இல்லாமலேயே வீட்டின் கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்ய உதவுகிறது. இந்த தொழில்நுட்பம் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதுடன், உள்கட்டமைப்பு பராமரிப்பு செலவுகளையும் குறைக்கிறது.

டோக்கியோவை சேர்ந்த 'WOTA Corp' நிறுவனம் உருவாக்கியுள்ள 'WOTA BOX' ஜப்பானின் கிராமப்புறங்களில் அமைதியான புரட்சியை செய்துகொண்டிருக்கிறது. குளிப்பதற்கும், முகம் கழுவுவதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தும் நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்பாட்டிற்கு தருகிறது. இதற்கு நகராட்சியினுடைய குடிநீர் குழாயோ, பாதாள சாக்கடை இணைப்போ எதுவும் தேவையில்லை. கழிப்பறை நீர் மற்றும் குடிநீரை தவிர்த்து, மீதமுள்ள நீரை இந்த இயந்திரம் தானாகவே சுத்திகரித்துக் கொள்ளும். சுழற்சி முறையில் ஏதேனும் நீர் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில், மழைநீரை சேகரித்து தானாகவே இயங்கத் தொடங்கி விடுகிறது.

இந்த இயந்திரத்தை எளிதாக எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் நீரின் தரத்தை உடனுக்குடன் கண்காணித்து சுத்திகரிக்கும் நவீன தொழில்நுட்பம் கொண்டது. பேரிடர் நிவாரண முகாம்கள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் வீடுகளில் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றது. 2025 சோதனைகளில் ஜப்பானிய அரசின் கடுமையான தரக்கட்டுப்பாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO) விதிமுறைகளை நிறைவேற்றியுள்ளது.

இதையும் படியுங்கள்:
டீக்கடை முதல் பெட்ரோல் பங்க் வரை: கூகுள் மேப்ஸின் 'Ask Maps' அம்சம் பற்றித் தெரியுமா?
Japan's 'WOTA BOX'

இந்த இயந்திரம் ஜப்பானிய அரசின் 51 கடுமையான தரக்கட்டுப் பாடுகளையும், உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளையும் வெற்றிகரமாகக் கடந்துள்ளது. ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். பூகம்பம் வந்தால் முதலில் பூமிக்கடியில் உள்ள குழாய்கள் தான் உடையும். ஆனால் WOTA இயந்திரங்களோ எந்தவித பாதிப்பும் இன்றி மக்களுக்கு தேவையான நீரை வழங்கி வருகின்றன.

இந்த தொழில்நுட்பம் தற்பொழுது ஜப்பானின் அக்கிடா(Akita) மற்றும் இஷிகாவா (Ishikawa) போன்ற மாகாணங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பம் பழைய செலவுமிக்க கழிவுநீர் குழாய் அமைப்புகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தைக் குறைத்து, நீர் மேலாண்மையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com