இந்தியாவில் Jio AirFiber சேவை தொடக்கம்: பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்!

இந்தியாவில் Jio AirFiber சேவை தொடக்கம்: பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்!
Published on

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சார்பில் இந்தியா முழுவதும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் பல்வேறு சலுகைகளுடன் கூடிய Jio AirFiber சேவையை தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

ஜியோ நிறுவனத்தின் 46வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தினுடைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக முகேஷ் அம்பானி தொடர்வார் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் Jio AirFiber சேவையை அறிமுகப்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. 10 கோடி வீடுகளுக்கு சென்றடையும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குவதில் ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது.

குறிப்பாக 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் நிறுவி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ தனது வயர்லெஸ் சேவை சாதனமான Jio AirFiberரில் நுகர்வோருக்கு ஆரம்ப கால சலுகைகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. தள்ளுபடியில் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் இணைய சேவை பெரும்பாலும் வயர்கள் வழியான இணைப்புகளாக வழங்கப்படுகின்றன. இனி வயர்கள் வெளியான சேவை நிறுத்தப்படுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் Jio AirFiber சேவையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பொருட்டு புதிய நுகர்வோருக்காக பல தள்ளுபடிகளை வழங்கப்படுகிறது. 5ஜி சேவை வழங்கப்பட்ட பகுதிகளில் தள்ளுபடி விலையில் அல்லது இலவச சேவையாக முதல் கட்டமாக தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதோடு Jio AirFiber மூலமாக உயர்தர இணைய சேவையை மக்கள் எளிதில் பெரும் பொருட்டு அதிதீவிர வேகம் முறையை கொண்டதாக இந்த சேவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் கல்விக்கான இணைய சேவைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com