

இன்றைய டிஜிட்டல் உலகில் லேப்டாப் (laptop) என்பது நம் உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அலுவலக வேலை முதல் பொழுதுபோக்கு வரை அனைத்திற்கும் இதையே சார்ந்திருக்கிறோம். ஆனால், இதே லேப்டாப்பில் நம் கண்ணுக்குத் தெரிந்தே ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது.
பெரும்பாலானோர் லேப்டாப்பை ஆன் செய்ய, ஆஃப் செய்ய மற்றும் டைப் செய்ய மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், விசைப்பலகையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பட்டன், உங்களின் வேலையை பாதியாகக் குறைக்கும் வல்லமை கொண்டது. அது எந்த பட்டன்? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
அதுதான், கீபோர்டின் இடதுபுறம் கீழே இருக்கும் 'Fn (Function)' பட்டன். "இது எல்லாருக்கும் தெரியுமே!" என்று நினைக்கலாம். ஆனால், இந்த Fn பட்டனை மற்ற கீகளுடன் சேர்த்துப் பயன்படுத்தும்போது கிடைக்கும் குறுக்குவழிகள் பலருக்குத் தெரிவதில்லை.
பலரும் அறியாத Fn பட்டனின் ஷார்ட்கட்ஸ்;
1. ப்ரொஜெக்டர் செட்டிங்ஸை மாற்ற:
'Fn + F7' பட்டன்களை அழுத்தினால் உங்கள் லேப்டாப் (laptop) திரை ப்ரொஜெக்டர் செட்டிங்ஸைத் திறக்கும். ஆனால், இது சில மாடல்களில் மட்டுமே மாறும். எல்லா லேப்டாப்பிலும் F7 ஆக இருக்காது. இதன் நோக்கம் திரையை லேப்டாப்பிலிருந்து ப்ரொஜெக்டருக்கோ அல்லது மற்றொரு மானிட்டருக்கோ மாற்றுவதுதான்.
2. மவுஸ் இல்லாமல் ஸ்க்ரோலிங்:
உங்கள் மவுஸ் வேலை செய்யவில்லையா? கவலை வேண்டாம். 'Fn + Up/Down Arrow' பட்டன்களைப் பயன்படுத்தி பக்கங்களை வேகமாக ஸ்க்ரோல் செய்ய முடியும். இது சாதாரண ஆரோ கீகளை விட வேகமாகச் செயல்படும்.
3. எண்கள்:
சிறிய லேப்டாப்களில் தனியாக 'Numeric Pad' இருக்காது. ஆனால் 'Fn + Num Lk' அழுத்தினால், உங்கள் கீபோர்டில் உள்ள சில எழுத்துக்கள் எண்களாக மாறிவிடும். இது கணக்கு வழக்குகளை வேகமாக முடிக்க உதவும்.
4. உங்கள் லேப்டாப்பில் Fn Lock வசதி இருந்தால், அதை ஆன் செய்து வைப்பதன் மூலம் ஒவ்வொரு முறையும் Fn பட்டனை அழுத்தாமலேயே மல்டிமீடியா கீகளைப் பயன்படுத்தலாம். இதற்கு 'Fn + Caps Lock' அல்லது 'Fn + Esc' முயற்சி செய்து பாருங்கள். வால்யூம் அல்லது பிரைட்னஸ் குறைக்க ஒவ்வொரு முறையும் Fn அழுத்தத் தேவையில்லை.
மற்றுமொரு ரகசிய பட்டன்: 'Windows' கீ
Fn பட்டனைப் போலவே Windows + V பட்டனை அழுத்திப் பாருங்கள். நீங்கள் இதற்கு முன்பு Copy செய்த பல விஷயங்களின் லிஸ்ட் அங்கே இருக்கும். இது பலருக்குத் தெரியாத ஒரு விஷயம். சட்டென திரையை மறைக்க Windows + D அழுத்தினால் டெஸ்க்டாப் வந்துவிடும்.
பொதுவாக லேப்டாப் (laptop) வாங்கும்போது அதன் ரேம் (RAM), ப்ராசஸர் மற்றும் கேமரா தரத்தை மட்டுமே பார்க்கிறோம். அதன் 'User Manual' படிக்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. இதனால், உற்பத்தியாளர்கள் நம் வசதிக்காகக் கொடுத்திருக்கும் பல நுணுக்கமான விஷயங்களை நாம் பயன்படுத்துவதில்லை. இந்தச் சிறிய Fn பட்டன் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், உங்களை ஒரு 'டெக் எக்ஸ்பர்ட்' ஆகவும் மாற்றும்.