Lava-வின் அடுத்த மாஸ்டர் பீஸ்! Agni 4-ல் உள்ள இந்த ஒரு அம்சம் போதும்!

LAVA AGNI 4
LAVA AGNI 4
Published on

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான Lava இன்டர்நேஷனல், லாவா என்ற பெயரில் ஸ்மார்ட் ஃபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது Lava Agni 4 என்ற அடுத்த ஜெனரேஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த போனில் அலாய் பிரேம் வழங்கப்பட்டுள்ளது. புதிய வாயு சிஸ்டம் மட்டும் டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி முழுவதும் மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டு வெளியான Lava Agni 3ன் அப்கிரேட் வெர்ஷனாகும்.

இந்த போனில் உள்ள வாயு ஏஐ மூலம் பயனர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை எடிட் செய்யவும், கிரியேட் செய்யவும், சுருக்கவும், பதிவு செய்யவும், மொழி மாற்றம் செய்யவும் பயன்படுத்தலாம். 3 ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் 4 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் இந்த போனில் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 24,999. ஆனால் அனைத்து பேங்க் டெபிட் மட்டும் கிரெடிட் கார்டுகளுக்கும் ரூபாய் 2,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

இதில் 8 GB RAM + 256 GB Storage உள்ள அமைவில் கிடைக்கிறது. நவம்பர் 20ஆம் தேதி அன்று மதியம் 12 மணியளவில் அமேசான், Lava வின் இ-ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் வெளியானது.

Lava Agni 4 ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்:

இந்த போனில் சக்தி வாய்ந்த MediaTek Diamensity 8350 சிப்செட் இருக்கிறது. இதன்AnTu Tu V10 ஸ்கோர் 1.4 மில்லியனுக்கு மேல் உள்ளது.

Vayu AI என்ற பிரத்தியேக AI அசிஸ்டன்ட் தான் இந்த போனின் பெரிய ஹைலைட்டே. AI Math Teacher, AI English Teacher, AI Horoscope, AI Image Generator மற்றும் AI Call Summary போன்ற இந்திய பயனர்களுக்கு ஏற்ற பல AI வசதிகள் இதில் உள்ளன. அத்துடன் Google ன் Circle-to-Search வசதியும் உள்ளது.

  • 6.67 இன்ச் 1.5 K AMOLED டிஸ்பிளே

  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

  • 50 + 8 மெகாபிக்சல் கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது.

  • 50 மெகா பிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

  • 8 ஜிபி ரேம்

  • 256 ஜிபி ஸ்டோரேஜ்

  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • 5ஜி நெட்வொர்க்

  • 5,000 mAh battery

  • 66 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com