தொடர்ந்து ஊழியர்களை வெளியேற்றும் நெட்பிளிக்ஸ்

தொடர்ந்து ஊழியர்களை வெளியேற்றும் நெட்பிளிக்ஸ்
Published on

300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது, நெட்பிளிக்ஸ்.

பிரபல ஓடிடி தளங்களில் ஒன்று நெட்பிளிக்ஸ். இதில் வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள் ஒளிப்பரப்பபடுவதால், மக்கள் மிகவும் விரும்பும் ஓடிடி தளமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் தான் தனது வணிகத்தினை மறுசீரமைக்கும் பொருட்டு நெட்பிளிக்ஸ் நிறுவனம் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த மே மாதம் சுமார் 150 பணியாளர்களை பணி நீக்கம் செய்திருந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக தற்போது 300 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்கள் பணிநீக்கம் தொடரும் என இத்துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளதால், ஊழியர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

கடந்த முறை செய்யப்பட்ட பணி நீக்கத்திலேயெ பெரும்பகுதி அமெரிக்காவில் நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த முறையும் அமெரிக்காவில் தான் அதிக பணியாளர்கள் -பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க 11,000 பணியாளர்கள் பணிபுரியும் இந்த நிறுவனத்தில் இரண்டாவது கட்டமாக இந்த பணி நீக்க நடவடிக்கையானது வந்துள்ளது.

இந்த பணி நீக்கத்தில் சரி பாதி ஊழியர்கள் எனவும் மீதி ஒப்பந்ததாரர்களும், பகுதி நேர ஊழியர்களும் என தெரிவித்துள்ளது.

"நாங்கள் வணிகத்தில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்தாலும், எங்கள் மெதுவான வருவாய் வளர்ச்சிக்கு ஏற்ப எங்களின் செலவுகள் அதிகரிக்கும் வகையில் இந்த மாற்றங்களைச் செய்துள்ளோம்," என்று நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த காலாண்டு வருவாய் மதிப்பீட்டில், அதன் நிகர சந்தாதாரர் இழப்புகள் 10x அளவிற்கு இருக்கும் என Netflix எதிர்பார்ப்பதாக, அபாயகரமான அறிவிப்பையும் வெளியிட்டது.
நெட்ஃபிக்ஸ் Q1 இல் 2,00,000 சந்தாதாரர்களை இழந்த பிறகு, Q2 இல் மேலும் இரண்டு மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் தளத்தை விட்டு வெளியேறுவார்கள் என நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்நிலையில் இழப்புகளை ஈடுசெய்ய இரண்டு முறைகளை கையில் எடுத்துள்ளது, நெட்பிளிக்ஸ்.
முதலாவது, அதன் வரலாற்றில் முதன்முறையாக ஓடிடி தளாத்தில் விளம்பரங்களை அறிமுகப்படுத்துவது. இரண்டாவது, தற்போது ஒரு பயனர் கணக்கில், கூடுதல் பயனர்கள் பயன்படுத்தும் முறைக்கு கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வர இருக்கிறது, நெட்பிளிக்ஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com