முன்னணி தொழிற்நுட்ப தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான லெனோவோ நிறுவனம் தனது புதிய ‘Lenovo Tab M11’ எனும் டேப்லெட் மாடலை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய டேப்லெட் மாடலானது பல தனித்துவமான அம்சங்களுடன் மிகவும் குறைந்த பட்ஜெட் விலையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த lenovo tab m11 மாடலின் அம்சங்களை சற்று விரிவாகக் காணலாம்.
குறிபிடத்தக்க சிறப்பம்சங்கள் என்னென்ன?
lenovo tab m11 மாடல் முன்னதாக 2024 சர்வதேச நுகர்வோர் மின்சாதன நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் புதியதாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த M11 ஆனது மிகவும் மெலிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. வெறும் 7.15mm அளவில் மெல்லிய மற்றும் 465கிராம் எடையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
இதன் ஸ்கிரீன் ரெசல்யூஷன் 1920 x 1200 (WUXGA). மேலும் 11-இன்ச் 90Hz டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
இதனுடைய உச்ச பிரகாசத்தின் அளவு 400 nits.
இந்த டேப்லெட் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், மாலி G52 GPU மேலும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பகத்துடன் வந்துள்ளது.
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது.
Tab 11 - விலை என்ன? எவ்வாறு வாங்குவது?
லெனோவோ நிறுவனம் ‘lenovo tab m11’ஐ ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. இது மொபைல் போன்களின் விலைக்கு ஈடாக அமைந்துள்ளது. ஆனால் தற்போது இந்த M11 டேப்லெட்டானது ‘Seafoam பச்சை நிறத்தில்’ மட்டுமே கிடைக்கபெற்று வருகிறது. இதனை lenovo.com, மேலும் பல்வேறு இ-காமர்ஸ் தளங்கள் அல்லது லெனோவோ ஷோ ரூம்களிலும் கூட வாங்கலாம். அதோடு கூடுதலாக, லெனோவோ வாங்குபவர்களுக்கு ‘Lenovo Tab Pen’ அதன் இணைப்பாக பயனர்களுக்கு தடையற்ற எழுத்து மற்றும் டூடுலிங் அனுபவத்தை வழங்குவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது.