பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆதார் பயோ மெட்ரிக்கை லாக் செய்வது எப்படி?

Aadhaar Biometric
Aadhaar Biometric

ஆதார் தகவல்களை பாதுகாப்பதற்காக பயோமெட்ரிக் மூலம் லாக் செய்யும் வசதி உருவாக்கம்.

இந்தியாவின் முக்கிய ஆவணமாக கருதப்படும் ஆதாரை பயன்படுத்தி நடைபெறும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது ஆதார் தகவலையும், வங்கியின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு கைரேகையை பயன்படுத்தி நூதன வகையில் மோசடி நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். ஆதார் தகவல்கள், சம்பந்தப்பட்டவரின் கைரேகையை கொண்டு இந்த நூதன மோசடி நடைபெறுகிறது. இதனால் ஆதார் எண்ணை பாதுகாக்கும் பொருட்டு பயோமெட்ரிக் லாக் செய்து கொண்டு தேவைப்படும் பொழுது அன்லாக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று சைபர் கிரைம் குற்றப்பிரிவு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆதார் தகவலை பாதுகாக்கும் பொருட்டு ஆதாரை பயோமெட்ரிக் மூலம் லாக் செய்து கொள்ளும் வசதியும், தேவைப்படும் பொழுது அன்லாக் செய்து கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் தகவல்களை பயோமெட்ரிக் லாக் செய்ய யுஐடிஏஐ என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும் அல்லது என் ஆதார் செயலுக்கு செல்ல வேண்டும். பிறகு என் ஆதார் என்பதை தேர்வு செய்து உள்ளே நுழைய வேண்டும். அதன் தொடர்ச்சியாக மெனு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து பயோமெட்ரிக் செட்டிங்கை தேர்வு செய்து எனெபிள் பயோமெட்ரிக் செட்டிங்கிற்கு அருகில் இருக்கும் டிக் மார்க்கை தேர்வு செய்து ஓகே கொடுக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி பதிவேற்றம் செய்து டன் கொடுத்தால் ஆதார் தகவல்கள் பயோமெட்ரிக் மூலம் லாக் செய்யப்படும். பிறகு தேவைப்படும் பொழுது அதே நடைமுறையை பயன்படுத்தி அன்லாக் செய்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com