புதன் கோளில் வைரமா? என்னப்பா சொல்றாங்க விஞ்ஞானிகள்!

Diamonds
Diamonds
Published on

சூரியனுக்கு மிக அருகில் புதன் கோள் இருப்பதால், அதிக வெப்பமான கோளாக இது பார்க்கப்படுகிறது. இந்த கோளில் மதிப்பு மிக்க வைரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

சூரிய குடும்பத்தின் முதல் கோள் புதன். இது தான் மிகச்சிறிய கோளும் கூட. புதன் சூரியனை ஒருமுறை சுற்றி வர 88 நாட்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. சூரியனின் பிரகாசத்தின் காரணமாக நம்மால் அவ்வளவு எளிதாக புதன் கோளை காண முடியாது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் தான் ஓரளவு பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதைப் பல நாடுகள் போட்டியாகவே கருதுகின்றனர். ஆராய்ச்சி செய்யப்பட்ட செவ்வாய், சூரியன் மற்றும் பூமியின் வரிசையில் புதனும் உள்ளது. சீனா மற்றும் பெல்ஜியம் நாட்டு விஞ்ஞானிகள் புதன் கோளில் ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த ஆராய்ச்சியில் நாம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இதன்படி, புதன் கோளில் மதிப்பு மிக்க வைரங்கள் அதிகளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

புதன் கோளில் படிந்துள்ள வைரங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு, சீனா மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். மேலும், புதன் கோளின் மேற்பரப்பில் சிலிக்கா, கார்பன் மற்றும் இரும்புக் கலவை இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதற்கு அடிப்புறத்தில் தான் வைர அடுக்குகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனத் தெரிகிறது. இந்த வைர அடுக்குகள் 9 மைல் அதாவது 14 கி.மீ. தடிமனில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மக்களுக்கு ஏன் தங்கத்தின் மீது இவ்வளவு மோகம்!
Diamonds

14 கி.மீ தடிமன் என்றால், புதன் கோளில் இருக்கும் வைரத்தின் மதிப்பு எவ்வளவு என்று கணக்கிட கணினி கூட சற்று நேரம் எடுத்துக் கொள்ளும் போலிருக்கிறதே!

தரைப்பரப்புக்கு அடியில் இருந்த கார்பன் தான், அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலையின் காரணமாக வைரமாக மாறியிருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன் சூரியனுக்கு மிகவும் அருகிலேயே இருப்பதால், அதிக வெப்பநிலையை எதிர்கொள்கிறது. இதனால் இங்கிருக்கும் சிலிக்கா, கார்பன் மற்றும் வைரம் போன்றவை உருகிய நிலையில் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

புதன் கோளில் இருக்கும் வைரத்தை எடுப்பது என்பது அசாத்தியமான செயல். இருப்பினும் இக்கோளின் காந்தப்புலம் மற்றும் புவியியல் கட்டமைப்புகளை அறிந்து கொள்ள இது உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதன் முதலில் புதன் கோளை ஆராய்ச்சி செய்தது நாசாவின் மெசஞ்சர் விண்கலம் தான். இதில் கிடைத்த பல அரிய தகவல்களை சீனா மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் பயன்படுத்திக் கொண்டதால்தான், வைரம் இருப்பதை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com