இந்தியாவில் அறிமுகமானது Meta Verification அம்சம்.

இந்தியாவில் அறிமுகமானது Meta Verification அம்சம்.

ட்விட்டருக்குப் பிறகு, மெட்டா நிறுவனத்தின் தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றிற்கு பணம் செலுத்தி சரிபார்க்கப்பட்ட டிக் மார்க்குகளை பெரும் அம்சம் இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. 

ட்விட்டர் நிறுவனம் பயனர்களுக்கு சரிபார்க்கப்பட்ட கணக்குகளை மாத சந்தாவில் வழங்கும் முறை தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க உதவும் 'மெட்டா வெரிஃபைடு' அம்சம் இந்தியாவிற்கு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் போலல்லாமல் ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட கணக்குகளை மெட்டா நிறுவனம் மதிக்கிறது. 

இந்தியாவில் iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள், தங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளை சரி பார்ப்பதற்கு மாத சந்தாவாக 699 ரூபாய் செலுத்த வேண்டும். இதை பிற்காலத்தில் பயனர்கள் இணையதளத்திலும் சரி பார்க்கலாம். கணக்குகள் சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு அதற்கான பேட்ஜ் அளிக்கப்பட்டு, ஆள்மாறாட்டம் ஆகியவற்றிலிருந்து சிறந்த பாதுகாப்பைப் பெறுவார்கள். 

இதுகுறித்து மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில் "தொடக்கத்தில் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்தில் இந்த அம்சம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், அதில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து, இந்தியாவில் பயன்படுத்தும் வண்ணம் சப்ஸ்கிரிப்சன் முறையை கொண்டு வந்திருக்கிறோம்" எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

மெட்டா வெரிஃபைட் டிக் வாங்குவதற்கு அதன் பயனர்கள் தொடர்ந்து பதிவுகள் போட்டதற்கான வரலாறு இருக்க வேண்டும். மேலும் பயனர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்புக்குள் வருபவர்கள், அவர்களின் ப்ரொபைல் பக்கத்திற்குச் சென்று, கெட் வெரிஃபைடு என்பதைக் கிளிக் செய்தால், பணம் செலுத்தி சந்தாவைப் பெறுவதற்கான புதிய பக்கம் உருவாகும். அதில் பணத்தைச் செலுத்தி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை வெரிஃபை செய்து கொள்ளலாம். 

தன் கணக்குகளை வெரிஃபை செய்ய விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயனரின் புகைப்படம் கொண்ட ஐடியை உள்ளீடு செய்ய வேண்டும். அந்த ஐடியில் உள்ள பெயரும் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்குகளில் கொடுக்கப்பட்டுள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவேளை ஏதாவது காரணத்திற்காக வெரிஃபிகேஷன் ரிஜெக்ட் செய்யப் பட்டால், அதற்காக செலுத்திய பணம் திருப்பிக் கொடுக்கப்படும். 

இதனால் ட்விட்டரைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமும் பிரபலமாக வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com