மொபைல் நெட்வொர்க் பிரச்சனையை தீர்க்கும் டிப்ஸ்!

Mobile Network
Mobile Network

வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் நமது ஸ்மார்ட் ஃபோனில் நல்ல தரமான நெட்வொர்க் வைத்திருப்பது அவசியமாகிறது. ஒரு ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் சரியில்லாத பட்சத்தில் அடிக்கடி ஃபோன் கால் கட் ஆவது, சிக்னல் இல்லாமல் போவது, டேட்டா ஸ்பீடு குறைவது போன்ற பல சிக்கல்கள் உண்டாக்கலாம். ஆனால் இனி இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நீங்கள் டென்ஷன் ஆக வேண்டாம். நெட்வொர்க் பிரச்சனையை சரி செய்வதற்கு ஏராளமான தீர்வுகள் உள்ளது. அவற்றை இந்த பதிவில் காணலாம்.

சில சமயங்களில் நெட்வொர்க் பிரச்சனை உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் செய்தாலே சரியாகிவிடும். அதற்கு உங்கள் போனை ஆப் செய்துவிட்டு மீண்டும் ஆன் செய்ய வேண்டும். பின்னர் மொபைல் நெட்வொர்க் செட்டிங் பக்கத்திற்கு சென்று அதை ரீப்ரஷ் செய்து புதிய கனெக்சனை உருவாக்கினால் உங்கள் நெட்வொர்க் பிரச்சனை சரியாக வாய்ப்புள்ளது. 

அதேபோல உங்கள் போனுக்கு நல்ல வலுவான சிக்னல் கிடைக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். சிக்னலே கிடைக்காத இடத்திற்கு சென்றால் நெட்வொர்க் பிரச்சனை ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் சிக்னல் கிடைக்கும் இடத்திற்கு நாம் செல்ல வேண்டியது அவசியம். அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியில் எந்த நெட்வொர்க் ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அந்த நெட்வொர்க்கைப் பயன்படுத்துவது நல்லது. 

அடுத்ததாக திடீரென நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் போனில் நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டால், உங்கள் சாதனத்தில் உள்ள ஏரோ பிளேன் மோடை ஒருமுறை ஆன் செய்து ஆப் செய்யவும். இது புதிய நெட்வொர்க் கனெக்சனை உருவாக்க உதவும். 

உங்கள் சாதனத்தில் சாப்ட்வேர் முறையாக அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பாருங்கள். சில சமயங்களில் பழைய சாஃப்ட்வேரில் சாதனம் இயங்கிக் கொண்டிருந்தால் கூட நெட்வொர்க் பிரச்சினைகள் ஏற்படும். எனவே நெட்வொர்க் செயல் திறனை மேம்படுத்த புதிய அப்டேட் நிச்சயம் உதவியாக இருக்கும். 

இறுதியாக மேற்கூறிய வழிகளில் எதுவுமே வேலை செய்யவில்லை என்றால் உங்கள் ஃபோனின் நெட்வொர்க் செட்டிங்கை ஒருமுறை ரீசெட் செய்து பாருங்கள். இவ்வாறு ரீசெட் செய்யும்போது உங்கள் சாதனத்தில் ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ள வைபை பாஸ்வேர்ட், ப்ளூடூத் டிவைஸ் போன்றவை நீங்கிவிடும். எனவே இதை கவனத்தில் கொண்டு நெட்வொர்க் ரீசெட் செய்யுங்கள்.

இவை அனைத்துமே செய்த பிறகும் கூட உங்கள் சாதனத்தில் நெட்வொர்க் சரியாக இல்லை என்றால், உடனடியாக கஸ்டமர் கேருக்கு போன் செய்து, நெட்வொர்க் தொடர்பான புகார் அளிக்கவும். அப்போது அவர்கள் நீங்கள் இருக்கும் குறிப்பிட்ட இடத்தில் நெட்வொர்க் அளவு எப்படி இருக்கிறது என்பதை சோதித்து அவர்களால் சரி செய்ய முடியுமா முடியாதா என்பதைக் கூறிவிடுவார்கள். எனவே இந்த வழிகளைப் பின்பற்றி எளிதாக உங்கள் நெட்வொர்க் பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com