ChatGPT-ல் புதிய அம்சம், இனி பேசினால் போதும்!

New feature in ChatGPT
New feature in ChatGPT
Published on

மிகவும் பிரபலமான ChatGPT செயற்கை நுண்ணறிவு கருவியில் குரல் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி நாம் அதில் டைப் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமக்கு என்ன தேவை என்று பேசினாலே அதற்கான பதில் கிடைத்துவிடும்.

OpenAI நிறுவனம் தன் பயனர்களுக்கு வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை கொண்டு வருவதாக சமீபத்தில் ஒரு அறிவிப்பில் வெளியிட்டது. இதன் மூலமாக எந்த ஒரு பயனரும் டெக்ஸ்ட் செய்வதற்கு பதிலாக பேசுவது மூலமாகவே இயக்க முடியும். இப்போது இந்த அம்சம் எல்லா பயனர்களுக்குமே இலவசமாக கொடுக்கப்பட்டுவிட்டது. கட்டணம் செலுத்தும் நபர்களுக்கு இது மிகவும் வேகமாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு முதலில் பயனர்கள் தங்களின் மொபைல் ஃபோனில் ChatGPT செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அதில் காட்டும் ஹெட்போன் ஐகானை தட்டினால் குரல் பயன்படுத்தி பேசும் அம்சம் செயல்படுத்தப்படும். இந்த அம்சத்தை பயன்படுத்தி பயனர்கள் ChatGPT-யுடன் நேரடியாக பேசலாம். இந்த அம்சம் பயனர்களின் அனுபவத்தை முற்றிலுமாக மாற்றும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இனி ChatGPT மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும்!
New feature in ChatGPT

பயனர்கள் இந்த அம்சத்தை சிறப்பாக பயன்படுத்தும் வகையில் ஐந்து குரல் தேர்வுகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த குரல்களை உருவாக்குவதற்கு தொழில்முறை குரல் நடிகர்களுடன் இணைந்து OpenAI நிறுவனம் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் நாம் பேசுவதை சரியாக புரிந்து கொண்டு அதை உரையாக மாற்றும் புதிய டெக்னாலஜியை இந்த நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இந்த முன்னேற்றத்தால் படைப்பாற்றல் சார்ந்த பயனர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாகும் என்கின்றனர்.

எல்லா பயனர்களும் தகவல் தொடர்புகளை சிறப்பாக அணுகுவதற்கும், மேலும் அவர்களின் அனுபவத்தை மேம்படுத்த இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் இதில் தொடர்ந்து இணைக்கப்படும் என OpenAI நிறுவனம் கூறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com