வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் நியூஸ்.. வந்தது நியூ அப்டேட்!

வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் நியூஸ்.. வந்தது நியூ அப்டேட்!
Published on

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியானது அவ்வபோது புதிய புதிய அப்டேட்டுகளை அளித்து வாட்ஸ் அப் யூசர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது “ஃபோன் நம்பர் பிரைவசி” என்னும் புதிய வசதி ஒன்றை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியானது அவ்வபோது புதிய புதிய அப்டேட்டுகளை அளித்து வாட்ஸ் அப் யூசர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது “ஃபோன் நம்பர் பிரைவசி” என்னும் புதிய வசதி ஒன்றை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய வாட்ஸ் அப் அப்டேட்டை இன்ஸ்டால் செய்த ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் யூசர்கள் என அனைவருக்கும் இந்த வசதியானது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

போன் நம்பர் பிரைவசி என வாட்ஸப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம் நீங்கள் இணைந்திருக்கும் கம்யூனிட்டியில் உங்களது அனுமதியின்றி மற்றவர்கள் யாரும் உங்களது வாட்ஸ் அப் எண்ணை பார்க்க இயலாது. சில மாதங்களுக்கு முன் வாட்ஸப் கம்யூனிட்டி என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட வாட்ஸ் அப் குரூப் போலவே இருக்கும் இந்த கம்யூனிட்டியில், ஒரே விதமான பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து செயல்படலாம். உங்களது கம்யூனிட்டியில் இருக்கும் யாரும் உங்களது அனுமதி இன்றி உங்கள் வாட்ஸ் அப் நம்பரை பார்க்க இயலாது என்பது தான் இந்த புதிய வசதியின் சிறப்பம்சமே. நீங்கள் கம்யூனிட்டியில் அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்தாலும், ரியாக்ட் செய்தாலும் உங்களது வாட்ஸ் அப் எண்ணானது அவர்களுக்கு மறைக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் உங்களது கம்யூனிட்டியில் இருக்கும் யாருடைய நம்பரை சேவ் செய்து வைத்திருக்கிறீர்களோ அவர்கள் மட்டுமே உங்களது வாட்ஸ் அப் நம்பரை பார்க்க முடியும். அவர்களை தவிர அந்த கம்யூனிட்டியின் அட்மின் உங்களது வாட்ஸ் அப் எண்ணை பார்க்கலாம். மற்ற எவராலும் உங்களது வாட்ஸ் அப் எண்ணை பார்க்க முடியாத விதத்தில் இந்த புதிய அப்டேட்டானது யூசர்களுக்கு பாதுகாப்பளிக்கிறது.

குறிப்பாக கம்யூனிட்டியில் செயல்படும் பல்வேறு யூசர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் இந்த புதிய அப்டேட் அமைந்துள்ளது யார் என்றே தெரியாத ஒருவர் அனுப்பும் செய்திக்கு நீங்கள் ரியாக்ட் செய்யும் பட்சத்தில் உங்களைப் பற்றி எந்த விவரமும் அவருக்கு தெரியப்படுத்தப்படாது என்பது வாட்ஸ் அப் யூசரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு மேலும் வலு சேர்க்கிறது.

கிடைத்துள்ள தகவல்களின்படி வரும் காலங்களில் இந்த பிரைவசி வசதியானது மற்ற குழுக்களுக்கும் நீட்டிக்கபடலாம் என்று தெரிய வந்துள்ளது. இவ்வாறு தங்களுடைய வாட்ஸ் அப் நம்பரை மறைத்து வைத்துள்ள மற்றவர்களை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் பட்சத்தில் அதற்கும் வாட்ஸ் அப் ஒரு வசதியை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு, தொடர்பு கொள்ள விரும்புகிறீர்கள் என்பதற்கான ரெக்வஸ்ட் அனுப்ப முடியும். அவர் உங்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் உங்களால் அவருடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு செய்திகளை அனுப்ப முடியும்.

இந்த புதிய ஃபோன் நம்பர் பிரைவசி வசதியானது தற்போது பீட்டா வெர்ஷனை இன்ஸ்டால் செய்துள்ள சில யூசர்களுக்கு கிடைத்துள்ளது. வரும் காலங்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மிக விரைவாகவே இந்த அப்டேட் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com