கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனம்: ஹால்மெஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க அலாரம்!

Burglar alarm and Edwin D. Holmes
Edwin D. Holmes
Published on

மனித சமூகம் வளர்ச்சியடைந்த போது, வீட்டு பாதுகாப்பின் அவசியமும் அதனுடன் கூடிய தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகரித்தன. இன்று நாம் பயன்படுத்தும் நவீன பாதுகாப்பு அமைப்புகளின் ஆரம்பக்கல்லை வைத்தவர் எட்வின் டி. ஹால்மெஸ் (Edwin D. Holmes) என்ற அமெரிக்க தொழில்முனைவோர். அவர் உருவாக்கிய முதல் மின்சார கொள்ளையன் அலாரம் வீட்டுப் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தியது. இந்த அலாரம் உலகின் பாதுகாப்பு தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கியமான மாற்றத்தை உருவாக்கியது.

எட்வின் டி. ஹால்மெஸ் வரலாறு:

எட்வின் ஒரு அமெரிக்க வியாபாரியும், பாதுகாப்பு கருவிகளில் ஆர்வமுள்ள ஒருவரும் ஆவார். 1850களில் மின்சாரத்தை பயன்படுத்திய முதல் குடியிருப்பு கொள்ளையன் அலாரம் அமைப்பை வணிக ரீதியாக அறிமுகப்படுத்தினார். அலாரம் கருவிகளை விற்பனை செய்து நிறுவும் முதல் வணிக பாதுகாப்பு நிறுவனத்தையும் தொடங்கியவர்.

முக்கிய சாதனைகள்:

முதல் மின்சார Burglar Alarm-ஐ சந்தையில் அறிமுகப்படுத்தினார். அவர் உருவாக்கிய நிறுவனமே பின்னர் ADT (American District Telegraph) எனப்படும் உலகப் புகழ்பெற்ற பாதுகாப்பு நிறுவனமாக வளர்ந்தது. குடியிருப்பு பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் முன்னோடியானார்.

எட்வின் டி. ஹால்மெஸ் யார்?:

உலகின் முதல் ‘தனியார் வீட்டு கொள்ளையன் அலாரம்’ அமைப்பை வணிக ரீதியாக உருவாக்கியவர் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் தந்தை என்று கருதப்படுபவர். ஹால்மெஸ் கண்டுபிடித்த Burglar Alarm (1850களின் மின்சார அலாரம் அமைப்பு) மிகவும் எளிய மின்சார சுற்று (electric circuit) முறையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டது.

1. கதவுகள் & ஜன்னல்களில் மின்சார வயர்கள் பதிக்கப்பட்டன. கதவு அல்லது ஜன்னல் மூடப்பட்டிருக்கும்போது ஒரு முழுமையான மின்சார சுற்று (closed circuit) உருவாகும். இந்த சுற்று தொடர்ச்சியாக மின்சாரம் ஓடி கொண்டிருந்தது.

2. யாராவது கதவைத் திறந்தால் என்ன ஆகும்? கதவு அல்லது ஜன்னல் திறக்கப்பட்டவுடன் மின்சார சுற்று துண்டிக்கப்படும் (open circuit). இதுவே, அலாரம் ஒலிக்க வேண்டிய ‘trigger’.

3. சுற்று துண்டிக்கப்பட்டவுடன் அலாரம் மணி (bell) ஒலிக்கும் சுற்று உடைந்து விடும்போது ஒரு மின்காந்த கருவி (electromagnet) செயல்பட்டு மணி அல்லது கூவல் கருவி “டிங்! டிங்!” என்று ஒலிக்கும். இது வீட்டின் உள்ளே இருந்தவர்கள் கொள்ளையனை உடனே அறிந்து செயல்பட உதவியது.

4. ADT (American District Telegraph) முறையுடன் இணைப்பு: பின்னர் ஹால்மெஸ் தனது அலாரத்தை நகரத்தின் டெலிகிராப் நெட்வொர்க்கிற்கு இணைத்தார். வீட்டு அலாரம் ஒலித்தால், டெலிகிராப் மையத்திற்கு (monitoring center) ஒரு தகவல் அனுப்பப்படும். அங்கிருந்து காவலர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள். இது உலகின் முதல் மானிட்டரிங் செய்யப்பட்ட வீட்டு பாதுகாப்பு அமைப்பு எனக் கருதப்படுகிறது.

எளிதில் சொல்வதானால் கதவு மூடப்பட்டிருக்கும்போது மின்சாரம் ஓடிக்கொண்டிருக்கும். திறந்தால் மின்சாரம் நிற்கும். மின்சாரம் நிற்கும் தருணத்தில் மணி ஒலிக்கும். கொள்ளையன் வந்தால் உடனே எச்சரிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
ஒரு நல்ல இயர்பட்ஸ் வாங்கணுமா.. அப்போ இது உங்களுக்குத்தான்..!
Burglar alarm and Edwin D. Holmes

எட்வின் டி. ஹால்மெஸ் கண்டுபிடித்த மின்சார கொள்ளையன் அலாரம், ஒரு சாதாரண தொழில்நுட்ப சாதனமல்ல, அது மனிதர்களின் வாழ்வை பாதுகாப்பான தாக்கிய ஒரு முக்கியமான திருப்புமுனை. அவரின் முயற்சி இன்று நம்மால் பயன்படுத்தப்படும் நவீன CCTV, சென்சார் அலாரம், ஸ்மார்ட் ஹோம் பாதுகாப்பு போன்ற அமைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com