உள்ளங்கையை நீட்டினால் பரிவர்த்தனை.. அமேசான் அசத்தல்!

Handscan amazon
Handscan amazonIntel

ள்ளங்கையை அசைத்தாலே பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பத்தை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை அன்று அமேசான் ஒன் (Amazon One) எனும் பாம் ரெகக்னிஷன் சர்வீஸ் என்ற புதிய பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

காசு கொடுத்து பொருட்கள் வாங்கிய நாட்கள் மலையேறி கேஷ்லெஸ் பேமெண்ட் என்ற டிஜிட்டல் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கேஷ்லெஸ் பேமெண்ட் முறையை அமேசான் நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று விட்டது. இதன் மூலமாக மளிகை பொருட்களை வாங்கும் தனது வாடிக்கையாளர்கள் உள்ளங்கையை பயன்படுத்தி பேமெண்ட் செலுத்தும் புதிய நடைமுறையை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சியாட்டலை தளமாகக் கொண்ட அமேசான் நிறுவனம், 2017 ஆம் ஆண்டில் வாங்கிய 500-க்கும் மேற்பட்ட 200 அவுட்லெட்டுகளில் ஏற்கனவே இருக்கும் இச்சேவையை நீட்டிக்கும் என்று செய்திக்குறிப்பு ஒன்றில் வெளியிட்டுள்ளது.

Amazon க்கு சந்தா செலுத்திய வாடிக்கையாளர்கள், Apple Payக்கான கிரெடிட் கார்டு அல்லது ஃபோனை எடுப்பதற்குப் பதிலாக, Amazon One சாதனத்தின் மீது தங்கள் உள்ளங்கைகளை அசைத்து பணம் செலுத்தலாம். நீங்கள் அமேசான் பிரைம் உறுப்பினராக இருந்தால், உங்கள் வாங்குதலுக்கும் ஏதேனும் சேமிப்பு அல்லது பலன்களைப் பயன்படுத்த உங்கள் மெம்பர்ஷிப்பை Amazon One உடன் இணைக்கலாம்.

இந்த தொழில்நுட்பம் ஒரு புதிய முன்னேற்றத்தையும், மக்களின் பாதுகாப்பையும் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் நாம் உபயோகிக்கும் செல்போன், ஏடிஎம் கார்டுகள் மூலம் நம் பணத்தை மூன்றாம் நபர் அல்லது அடையாளம் தெரியாதவர்கள் கூட பயன்படுத்த முடியும். ஆனால் உங்கள் உள்ளங்கையை நகலெடுப்பது என்பது முடியாத ஒன்றுதானே..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com