உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மையம் நம்ம இந்தியாவில்...

Science city Kolkata
Science city Kolkata
Published on

சியாவின் மிகப்பெரிய அறிவியல் நகரம் (Science city) கொல்கத்தாவில் உள்ளது. இது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் தேசிய அறிவியல் அருங்காட்சியக சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இது அறிவியல் மாணவர்கள் மகிழவும், பார்க்கவும் அனைவருக்கும் ஏற்ற இடமாகும்.

தேசிய அறிவியல் அருங்காட்சிய சபையின் முதல் தலைமை இயக்குனர் சரோஜ் கோஷ் இந்த மையத்தை கருத்தியல் செய்த பெருமைக்குரியவர். இரண்டு பகுதிகளாக திறக்கப்பட்டது. மையவளாகம் டிசம்பர் 21 1996 இல் அப்போதைய மேற்கு வங்காள முதல்வர் ஜோதி பாசு முன்னிலையில் பால் ஜோசப் கிரட் ஷனால் திறந்து வைக்கப்பட்டது. முழு மையத்தையும் அப்போதைய பிரதமர் குஜ்ரால் அவர்களால் 1997-ல் ஜூலை 1 அன்று திறந்தார்.

ஆய்வுக்கூடம் திறந்தது

இந்தியாவின் அப்போதைய மத்திய கலாச்சார அமைச்சராக இருந்த அம்பிகா சோனி அவர்களால் டிசம்பர் 6, 2008 அன்று இந்த பூமி ஆய்வுக்கூடம் திறந்து வைக்கப்பட்டது. புவி குறித்த நிரந்தர கண்காட்சி இரண்டு அடுக்கு அரைக்கோள கட்டிடத்தில் அமைந்துள்ளது.

இங்கு தெற்கு பகுதி அரைக்கோளத்தின் விவரங்களை தரைத்தளத்திலும், வடக்கு அரைக் கோளத்தின் விவரங்களை முதல் தளத்திலும் பார்க்கலாம். மண்டபத்தின் மையத்தில் உள்ள ஒரு பெரிய பூகோளத்தை ஒவ்வொரு அரைக்கோளத்திலும் செங்குத்தாக 12 பகுதிகளாக கொண்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவின் முக்கிய அம்சங்களான இயற்பியல், புவியியல், நிலங்கள் மற்றும் மக்கள் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் பூமியில் உள்ள பிற ஆற்றல்மிக்க இயற்கை நிகழ்வுகள் ஆகியவை மத்திய உலகம் முழுவதும் சிறப்பித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான காட்சிகள் பல்லூடகம், காணொளி சுவர்கள், அகன்ற திரை காணொளி, சுழல் மேஜை, கணினி தொடுதிரை மற்றும் மூன்று முப்பரிமாண திரையரங்கம் போன்ற நவீன காட்சி தொழில்நுட்பங்களுடன் இது அமைக்கப்பட்டுள்ளது.

விண்வெளி பட காட்டி

150 சிறப்பு திரைப்பட கருவிகள் மற்றும் பெரிய திரைப்பட சுருள் ஒளிப்படக் காட்டியமைப்பு கொண்ட கீ லியோசு நட்சத்திரக் கோளரங்கம் பொருத்தப்பட்ட விண்வெளி திரையரங்கம் 23 மீட்டர் விட்டம் கொண்ட சாய்ந்த குவி மாடத்தில் 360 நபர்கள் ஒரே திசையில் அமரக்கூடிய வகையில் வசதியினை கொண்டுள்ளது. ஜூன் 2013 முதல் இங்கு 40 நிமிட கால அளவு திரைப்படமான அட்வென்ச்சர்ஸ் இன் வைல்ட் கலிபோர்னியா படம் திரையிடப்படுகிறது.

முப்பரிமாண அரங்கம் பார்வையாளர்கள் போலராய்டு கண்ணாடிகள் மூலம் முப்பரிமான காட்சியின் ஒவ்வொரு விளைவையும் அனுபவிக்கும் இசை பிரிப்பு ஒளிபடக் காட்டி அமைப்பை அடிப்படையாகக் கொண்டது இந்த காட்சியகம்.

கண்ணாடி அதிசயம்

இங்குள்ள ஒளியின் பிரதிபலிப்பு அடிப்படையில் 35 கண்காட்சிகள் உள்ளன.

அறிவியல் ஆய்வுக்கூடம்

இங்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் சுமார் 5400 சதுர மீட்டர் பரப்பளவில் 2016-ல் திறக்கப்பட்டது. இது பார்வையாளர்களின் தேவை அடிப்படையிலான கற்றலை விளக்குகிறது. இதில் நான்கு பிரிவுகள் உள்ளன.

பெரிய திரையங்கம்

இங்குள்ள பெரிய திரையரங்கம் 2232 இருக்கைகள் கொண்ட பிரதானமான கலையரங்கம். இங்கு ஒரே நேரத்தில் 100 கலைஞர்கள் பங்கேற்கும் வசதியுடன் கூடிய கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய அரங்கம் இது.

சிறிய கலையரங்கம்

இந்த சிறிய கலையரங்கத்தில் 392 இருக்கைகள் ஒரே நேரத்தில் 30 கலைஞர்களுக்கான மேடை, சிறிய அளவிலான மாநாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் இது ஏற்றது.

கருத்தரங்கு கட்டிடம்

இங்கு 11 அரங்குகள், நூறு பேர் அமரக்கூடிய நான்கு அரங்குகள், தலா 40 பேர் அமரும் திறன் கொண்ட இரண்டும், தலா முப்பது பேர் அமரும் திறன் கொண்ட இரண்டும், 15 பேர் அமரும் திறன் கொண்ட இரண்டும், 12 பேர் அமரக்கூடிய ஒரு சந்திப்பு முறைகளை உள்ளடக்கியது. மாநாடு கருத்தரங்குகள் கூட்டம் மற்றும் பட்டறைகளுக்கான இடம் பார்க்க பரவசமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சாவிகள் பாதுகாப்புக்கு மட்டுமல்ல... டெக்னாலஜி தந்த பயனுள்ள கீ செயின்கள்!
Science city Kolkata

இங்கு பார்க்க வேண்டிய காட்சியகங்கள். டைனோ மோஷன் ஹால், பல்வேறு வகையான நன்னீர் மீன்கள், பட்டாம்பூச்சி பூங்கா, கோலத்தில் அறிவியல் காட்சிகள் என பிரமிப்பூட்டும் இதனை அங்கு சென்று பார்த்து வரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com