UPI பேமெண்ட் தோல்வியடைந்தால் இனி கவலை இல்லை!

Razorpay Instant Refund.
Razorpay Instant Refund.

இன்றைய உலகில் அனைத்துமே வேகமாக மாறிவிட்டது. தொழில்நுட்ப முன்னேற்றத்தால் கையில் காசு இல்லாமல் வெளியே சென்றாலும், யுபிஐ பேமெண்ட் முறையைப் பயன்படுத்தி நாம் விரும்பியதை வாங்க முடியும். எனவே கையில் ஒரு மொபைல் போன் இருந்தால் போதும், நாம் எங்கு வேண்டுமானாலும் பணம் இல்லாமல் செல்லலாம். 

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது டிஜிட்டல் பேமெண்ட் முறைதான். ஆனால் இதில் இருக்கும் முக்கியமான குறைகளில் UPI பரிவர்த்தனை சில சமயங்களில் தோல்வியடைந்து வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம், ரீபண்ட் பெறுவது கடினமாக இருந்தது. இந்த பிரச்சனைக்கு இப்போது ஒரு தீர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.

தோல்வியடைந்த UPI பரிவர்த்தனைகளுக்கு உடனடியாக ரீபண்ட் வழங்கும் அம்சம் Razorpay என்ற பணப் பரிவர்த்தனை தளம் மூலமாக இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக தோல்வியடைந்த யுபிஐ பரிவர்த்தனைக்கு இரண்டு நிமிடங்களில் உடனடியாக ரீபண்ட் பெற முடியும். ஏற்கனவே இருக்கும் நடைமுறைப்படி தோல்வியடைந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான ரீபண்ட் தொகை திரும்பக் கிடைப்பதற்கு 6 வேலை நாட்கள் வரை ஆகிவந்த நிலையில், இப்போது இவர்களின் புதிய அம்சத்தால் இரண்டு நிமிடத்தில் ரீபண்ட் தொகை நமக்கு கிடைத்துவிடும். 

இதுகுறித்து விளக்கம் அளித்த Razorpay CEO பயாஸ் நம்பிசன், “நாங்கள் சேகரித்த தரவுகளின்படி கிட்டத்தட்ட 15 சதவீதம் வரையிலான யுபிஐ ட்ரான்சாக்ஷன்கள் பெண்டிங் நிலையில் இருக்கின்றன. இதனால் பயனர்கள் UPI முறையில் பேமெண்ட் செலுத்த தயங்கும் காரணத்தால், 40% வரை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இதை சரி செய்வது தொடக்கத்தில் எங்களுக்கு கஷ்டமாக இருந்தாலும், தோல்வியடைந்த ட்ரான்சாக்ஷனுக்கான ரீபண்ட் உடனடியாக கஸ்டமர்களுக்கு கிடைப்பதால், அவர்களின் நம்பிக்கை மற்றும் திருப்தியை எங்களால் நிலைநாட்ட முடிகிறது” எனக் கூறினார்.

இதையும் படியுங்கள்:
உங்க உடன்பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கா ஆசையா? அப்படின்னா இந்த 6 விஷயங்களை பண்ணுங்க! 
Razorpay Instant Refund.

எனவே இனி Razorpay தளம் வழியாக பணப்பரிமாற்றம் செய்யும்போது, ஒருவேளை தோல்வியுற்றாலும், அதற்கான ரீபண்ட் தொகை உடனடியாக கிடைத்துவிடும் என அந்த நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com