இனி இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட் செய்ய Facebook போதும்.

இனி இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட் செய்ய Facebook போதும்.

துவரை பல காரணங்களுக்காக பேஸ்புக் தளத்தை நீங்கள் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் பேஸ் புக்கிலேயே இணைய வேகத்தை அளக்கக்கூடிய 'ஸ்பீடு டெஸ்ட்' செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

பேஸ்புக் செயலியானது பல அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தளமாகும். மார்க் ஜுகர்பர்க்கின் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், அதன் பயனர்களுக்கு இதுநாள் வரை சிறந்த அனுபவத்தை வழங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து மேலும் பல புதிய அம்சங்களை பேஸ்புக் செயலியில் சேர்த்து வருகிறது. அடுத்ததாக பேஸ்புக்கின் புதிய அப்டேட்டில், அட்டகாசமான அம்சம் ஒன்றை இணைத்துள்ளது. இந்த புதிய அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்று விரிவாகப் பார்க்கலாம்.  

பேஸ்புக் நிறுவனத்தின் நோக்கம் என்னவென்றால், அதன் செயலியில் இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் மூலமாக பயனர்களுக்கு சிறந்த சமூக ஊடக அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே. உதாரணத்திற்கு பேஸ்புக்கின் புதிய ப்ரொபைல் பக்கமானது, பயனர்கள் இதை சிறப்பாகவும் எளிமையாகவும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் சமூக ஊடகத்தை மையமாகக் கொண்ட அம்சங்களை மட்டுமே பயனர்களுக்கு வழங்குவதைத் தவிர்த்து, மேலும் பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சிலவற்றின் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 

அருகிலுள்ள Wi-Fi நெட்வொர்க்கை பயனர்கள் சரிபார்க்கும் விருப்பத்தை சமீபத்தில் வழங்கியது. இதன் அடுத்த கட்டமாக, பயனர்களுடைய சாதனத்தின் இணையவேகம் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய ஸ்பீட் டெஸ்ட் அம்சத்தை தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக்கின் புதிய அப்டேட்டுக்கு பிறகு இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்காக நீங்கள் உங்கள் பேஸ்புக் செயலியை அப்டேட் செய்துவிட்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த அம்சமானது தற்போது ஆண்ட்ராய்டு பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது. சிறிது காலம் கழித்து IOS பதிப்பிலும் இதை எதிர்பார்க்கலாம். 

பேஸ்புக் மூலம் Internet Speed Test செய்வது எப்படி?

  1. முதலில் பேஸ்புக் செயலியில் Login செய்து கொள்ளுங்கள்.

  2. வலது புறத்தில் மேல் பகுதியிலுள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்யவும். 

  3. அதில் Settings & Privacy என்னும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.

  4. தற்போது திறக்கும் பக்கத்தில் Wi-Fi & Cellular Performance என்பதை கிளிக் செய்தால் Speed Tab என காட்டும். 

  5. பின்னர் Speed Tab என்பதை கிளிக் செய்து Run Speed Test விருப்பத்தை தேர்வு செய்தால், இணைய வேகத்தை அறிவதற்கான ஸ்பீட் டெஸ்ட் பக்கம் திறக்கப்படும். 

அந்த புதிய பக்கத்தில் Run Speed Test என்பதை தட்டியவுடன், உங்கள் சாதனத்தில் எவ்வளவு இணைய வேகம் இருக்கிறது என்பதை பேஸ்புக் செயலி அளக்க ஆரம்பித்து விடும். இந்த சோதனை முடிந்தவுடன் உங்கள் இணையத்தின் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகம் இரண்டையும் நீங்கள் அறிய முடியும். 

இந்த முறையைப் பயன்படுத்தி எவ்வித மூன்றாம் தரப்பு செயலியின் உதவி இல்லாமலேயே, Facebook வாயிலாகவே இன்டர்நெட் வேகத்தை சில நிமிடங்களில் அறியலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com