இனி செல்லப்பிராணிகள் பேசுவதையும் புரிந்து கொள்ளலாம்!

You can understand pets talking
You can understand pets talking

நீங்கள் செல்லப்பிராணி வளர்ப்பவராக இருந்தால், நீங்கள் வளர்க்கும் பூனையோ, நாயோ, கிளியோ, முயலோ பேசுவது உங்களுக்குப் புரிந்தால் எப்படி இருக்கும்? ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு செல்லப்பிராணிகள் பேசுவதையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அதற்கு AI தொழில்நுட்பம் உங்களுக்கு உதவும். 

நாம் வளர்க்கும் நாய்க்கும் பூனைக்கும் ஒரு பெயரை வைத்து நாம் அழைப்பது போல, அவை நம்மை எப்படி அழைக்கும் என்பதை தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வமாக உள்ளதா? இதற்கான ஆய்வுதான் நடந்து வருகிறது. அதாவது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விலங்குகளின் மொழியை மனிதர்களுக்கு மொழிபெயர்க்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்காக செய்யப்பட்டு வரும் ஆய்வில், கடந்த வாரம் பூனைகளின் முகபாவணையை புரிந்துகொள்ளும் ஆய்வு குறித்த செய்தி ‘தி சயின்ஸ் டைரக்ட்’ என்ற பத்திரிகையில் வெளியானது. அதில் பூனைகள் மற்ற பூனைகளுடன் உரையாடும்போது கிட்டத்தட்ட 250க்கும் அதிகமான முகபாவனைகளை வெளிப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் பூனைகள் மனிதர்களுடன் உரையாடுவதற்கும் மற்ற பூனைகளுடன் தொடர்பு கொள்வதற்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்:
டிஸ்ப்ளே இல்லாத ஸ்மார்ட்போன், விலை எவ்வளவு தெரியுமா?
You can understand pets talking

எனவே இப்படி இருவேறு வகையான முகபாவனைகளை பூனைகள் வெளிப்படுத்துவதால், அவற்றை சரியாக புரிந்து கொள்வது சவால் நிறைந்தது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் AI தொழில்நுட்பத்தால் இதைத் துல்லியமாகக் கண்டுபிடித்து நமக்குத் தெரியப்படுத்த முடியும் என்பதால், AI தொழில்நுட்பத்தின் உதவியை நாடியுள்ளனர். 

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செல்லப்பிராணிகளுடன் தொடர்பு கொள்வது மட்டுமின்றி அவற்றின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு மனிதர்களால் நடந்துகொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு மாட்டின் முகபாவணையை வைத்து பால் கறக்கும்போது அவை எத்தகைய வலியை அனுபவிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நாம் செயல்படலாம். இதன் மூலமாக அவற்றிற்கு ஏற்பட்டுள்ள உடல் உபாதைகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சைகள் வழங்க முடியும். 

இதனால் ஆய்வாளர்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பல விலங்குகளிடம் தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சி ஏற்படும் என நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com