1,90,372 டாலருக்கு ஏலம் போன ஐபோன். அப்படி என்ன இருக்கு அதுல?

1,90,372 டாலருக்கு ஏலம் போன ஐபோன். அப்படி என்ன இருக்கு அதுல?

ப்பிள் என்றால் ஆப்பிள் பழம் ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ, முதலில் ஆப்பிள் ஐபோன் சாதனங்கள் ஞாபகத்திற்கு வந்துவிடும். மேலும் ஐபோன் என்றாலே விலை அதிகமாக இருக்கும் என்பதும் பலருக்குத் தெரியும். ஆனால், சமீபத்தில் பழைய ஐபோன் ஒன்று இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1 கோடியே 56 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. 

தற்போது இருக்கும் ஆப்பிள் ஐபோனின் விலை அதிகமாக இருக்கிறது என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அதன் பழைய மாடல்கள் நாம் நினைத்துப் பார்ப்பதை விட அதிக விலைக்கு தகுதியானதென்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? சமீபத்தில் வெளியான ஐபோன் 14 மாடல்களின் விலை பெரும்பாலான நபர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் தற்போது ஏலம் விடப்பட்ட ஒரு ஐபோன் சாதனத்தின் விலை என்னவென்று கேட்டால் நீங்கள் வாயடைத்துப் போவீர்கள். 

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபாட், ஐபோன் மற்றும் மேக் சாதனங்கள் இப்போது பழங்காலத்து பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. அவை ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு ஏலம் விடப்படுகிறது. முதல் முறை வெளியான ஐபோன் சாதனம் ஒன்று சமீபத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடியே 30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்த ஐபோன் மாடல் அது தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட அசல் பாக்ஸ் உடன் சீல் வைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது அதை யாரும் இதுவரை பயன்படுத்தவில்லை. 

நான்கு ஜிபி வேரியெண்டான இந்த ஐபோன் மாடல், அதன் வெளியீட்டின்போது கூட அரிதாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் அந்த சாதனம் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. ஏலத்தின் தொடக்கத்தின்போது அதன் மதிப்பு 1 லட்சம் டாலர் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டு, 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் டாலர் வரை இந்த சாதனத்தை விற்றுவிடலாம் என ஏல நிறுவனமான LCG எதிர்பார்த்தது. 

அதன்படி கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி $10,000 டாலருடன் ஏலம் தொடங்கி, ஜூலை 13ஆம் தேதி வரை சுமார் $41000 டாலர் வரை ஏலம் சென்றது. இந்த ஏலம் நேற்று திடீரென உயர்ந்து, இறுதி நேரத்தில் $1,08,356 டாலராக விலை உயர்ந்தது. இறுதியில் $158,644 ஏல விலையுடன் நிறைவடைந்தது. மொத்தமாக அதன் வரி அனைத்தும் சேர்த்து $190,372 டாலர்களுக்கு இந்த ஐபோன் விற்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூபாய் 1 கோடியே 56 லட்சமாகும். 

தான் எதிர்பார்த்த விலையை விட சுமார் 318 மடங்கு அதிக விலைக்கு இந்த சாதனம் எலத்தில் விற்கப்பட்டுள்ளதாக LCG நிறுவனம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com