ஒரு வினாடியில் ஒரு ஜிபி வேகம்: ஜியோ ஏர்ஃபைபர்!

Jio AirFiber
Jio AirFiber
Published on

ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஏர்ஃபைபர் சேவை மூலம் ஒரு வினாடிக்கு ஒரு ஜிபி வேகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

உலகம் பல்லாயிரம் ஆண்டுகளாக கண்டிடாத மாற்றங்களை கடந்த 50 ஆண்டுகளில் கண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தொலைத்தொடர்பு. விஞ்ஞான வளர்ச்சியினுடைய மாபெரும் பரிணாம வளர்ச்சியே இணையதள சேவையாக பார்க்கப்படுகிறது. இன்று இணைய சேவை பயன்படுத்தாத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா வகையான வேலைகளிலும் இணையதளம் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. 1975 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொலைத்தொடர்பு இணையதள சேவைக்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2011 ஆம் ஆண்டு இந்தியா தொலைதொடர்பு இணைய சேவையை தொடங்கியது. 2016 ஆம் ஆண்டு ஜியோ நிறுவனம் வருகைக்குப் பிறகு இணைய சேவை இந்தியா முழுவதும் மிகப்பெரும் அளவில் விரிவடைந்தது. இது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையே கடுமையான போட்டியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக குறைந்த விலையில் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா வரை தர நிறுவனங்கள் தொடங்கின. இதன் மூலம் ஒரு வினாடிக்கு ஒரு எம்பி டேட்டா வேகம் கிடைத்தது.

நிறுவனங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த பைபர் அன்லிமிடெட் இணைய சேவை வளர்ச்சி அடைந்து. தற்போது வீடுகளில் அன்லிமிடெட் வைஃபை சேவையை பலரும் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக ஓடிடி தளங்கள் மூலமாக படம் பார்ப்பதற்கு பெரிதும் பயன்படுகின்றன. இதன் மூலம் ஒரு வினாடிக்கு 30 எம்பி வேகம் கிடைக்கிறது.

இந்த நிலையில் தான் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் ஏர்ஃபைபர் சேவையை செப்டம்பர் 19 நாளை முதல் தொடங்க உள்ளது. ஒயர் வசதி இல்லாமல் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் என்று அனைத்து இடங்களிலும் ஏர்ஃபைபர் பயன்படுத்தும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அன்லிமிடெட் டேட்டா சர்வீஸ் வேகமாக பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் டவுன்லோட் செய்து சேவையை பெற முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் ரிலையன்ஸ் ஏர்ஃபைபர் மூலம் ஒரு வினாடிக்கு ஒரு ஜிபி வேகத்தில் டேட்டா பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது சாத்தியம் அல்ல என்றும், அதே நேரம் நெட்வொர்க் டிராபிக் ஏற்படும் நேரங்களில் ஏர்ஃபைபர் முற்றிலும் வேகம் இழந்து விடும் என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com