
பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 15 இன்று (அக் 27) மாலை சீனாவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் 16ஜிபி அதிவேக ரேம் செயல் திறனுடன் 1TB உள் சேமிப்பகத்துடன் இருக்கிறது.
இதனால் அதிக நினைவகம் மற்றும் அதிக வேகத்தில் சிறப்பாக இயங்கும். இதன் எடை 218 கிராமுடன் மெல்லிய வடிவத்தில் கிடைக்கிறது. மிகவும் பிரகாசமான திரையுடன் அதிவேக செயல் திறனுக்காக இது விற்பனைக்கு வருகிறது.
இதன் விலை சீனாவில் ₹55,000 வரையில் இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ₹70,000 முதல் ₹75,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலைக்கு மேல் அசல் விலை தெரியலாம்.
இதன் சிறப்பம்சம்கள்:
பிராசசர்: ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரல் 5, 4.6 GHz, Dual core
முன்புற கேமரா: 32MP
பின்புற கேமரா: 50MP + 50MP
வீடியோ செயல்திறன்: 4K 120 fps
பேட்டரி: 7300 mAh
சார்ஜிங்: 120W
ஆபரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 16
டிஸ்பிளே: 6.78 இன்ச் AMOLED
புதுப்பிப்பு திறன்: 165HZ
புளூடூத்: வெர்ஷன் 6
WiFi: வெர்ஷன் 7
தற்போது மார்க்கட்டில் உயர்ந்து வரும் IQOO ஸ்மார்ட்போன் நிறுவனம், தனது புதிய மாடலான IQOO 15ஐ இந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
IQOO 13 இன் அப்ட்டேட் வெர்ஷனாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டைனமிக் க்ளோ என்ற புதிய அம்சம் இடம்பெறுகிறது. இது ஒரு லேசான பளபளப்பு, மென்மையான விளைவுகள் கூடியது. 12GB ரேம் மற்றும் 256 GB நினைவகத்துடன் இது விற்பனைக்கு வெளியாகயுள்ளது.
இதன் விலை ₹60,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் சிறப்பம்சம்கள்:
பிராசசர்: ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரல் 5, 4.6GHz MHz ஆக்டா-கோர்
முன்புற கேமரா: 32MP
பின்புற கேமரா: 50MP + 50MP + 50MP
வீடியோ செயல்திறன்: 2K, 60 fps
பேட்டரி: 7000 mAh
சார்ஜிங்: 100W
ஆபரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 16
டிஸ்பிளே: 6.85 இன்ச் AMOLED
புதுப்பிப்பு திறன்: 144HZ
புளூடூத்: வெர்ஷன் 6
WiFi: வெர்ஷன் 7
ரியல்மி நிறுவனம் சமீபத்தில் சீனாவில் 'ரியல்மி ஜிடி 8 ப்ரோ' ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. இது குவால்காம் ஃப்ளாக் ஷிப் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரல் 5 SoC உடன் R1 X கிராபிக்ஸ் சிப் பொருத்தப்பட்டு கேமிங் அனுபவங்களை சிறப்பானதாக ஆக்குகிறது.
இது தூசி மற்றும் நீர் ஆகியவற்றில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க IP69 + IP68 + IP66 மதிப்பீடுகளை பெற்றுள்ளது. இதன் அடிப்படை மாடல் 16 GB ரேம் வேகத்துடன் 1TB நினைவகத்துடன் கிடைக்கிறது. இதன் 200MP கேமரா தூரத்தில் உள்ளவைகளையும் ஜூம் செய்து படம் எடுக்கும் வகையில் உதவிகரமாக உள்ளது.
இதன் விலை தோராயமாக ₹55,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் சிறப்பம்சம்கள்:
பிராசசர்: குவால்காம் ஃப்ளாக் ஷிப் (ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரல் 5 SoC, 4.6GHz MHz ஆக்டா-கோர்)
முன்புற கேமரா: 32MP
பின்புற கேமரா: 50MP + 50MP + 200MP
வீடியோ செயல்திறன்: 4K 120 fps
பேட்டரி: 7000 mAh
சார்ஜிங்: 120W
ஆபரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 16
டிஸ்பிளே: 6.78 இன்ச் LTPO AMOLED
புதுப்பிப்பு திறன்: 165HZ
புளூடூத்: வெர்ஷன் 6
WiFi: வெர்ஷன் 7