
இப்போதெல்லாம் ஆன்லைன்ல பணப் பரிவர்த்தனை பண்றதும், பேங்க் ஆப்ஸ் பயன்படுத்துறதும் ரொம்பவே அதிகமாகிடுச்சு. அதே வேகத்துல சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் கூடிட்டே வருது. OTP கேட்டு ஏமாத்துறது, கவர்மென்ட் வெப்சைட் மாதிரி போலி லிங்க் அனுப்பி பணம் பறிக்கிறதுன்னு ஏகப்பட்ட மோசடிகள் நடக்குது. நிறைய பேர் ஏமாந்தது கூட தாமதமாத்தான் தெரியுது. அப்புறம் புகார் கொடுக்கவும் நேரம் எடுத்துக்குறாங்க.
ஆனா, இது ரொம்ப பெரிய தவறுங்க. மோசடி நடந்த உடனே, சில நிமிஷங்களுக்குள்ள புகார் கொடுத்தா, உங்க பணம் திரும்பி கிடைக்கறதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு. அந்த பொன்னான நேரம் எது, எப்படி புகார் கொடுக்கிறதுன்னு பார்க்கலாம் வாங்க.
"கோல்டன் ஹவர்"னா என்ன?
நீங்க ஆன்லைன்ல ஏமாத்தப்பட்ட உடனே, உங்க பணத்தை திரும்பப் பெற வாய்ப்புள்ள ஒரு குறிப்பிட்ட நேரத்தைத்தான் "கோல்டன் ஹவர்" (Golden Hour)-னு சொல்றாங்க. குறிப்பா, மோசடி நடந்த பிறகு முதல் 30 முதல் 60 நிமிஷம் ரொம்பவே முக்கியம். இந்த நேரத்துக்குள்ள நீங்க வேகமா புகார் கொடுத்தா, சைபர் குற்றவாளிகள் கையில இருந்து உங்க பணத்தை போலீஸால காப்பாத்த முடியும்.
ஏன் உடனடியா புகார் கொடுக்கணும்?
சைபர் குற்றவாளிகள் ரொம்பவே புத்திசாலிகள். உங்க அக்கவுண்ட்ல இருந்து பணத்தை எடுத்ததும், சும்மா இருக்க மாட்டாங்க. அதை உடனே பல அக்கவுண்ட்டுகளுக்கு மாத்திட்டே இருப்பாங்க. ஒரு மோசடி டெல்லியில நடந்துச்சுன்னா, அடுத்த சில நிமிஷங்கள்ல அந்தப் பணம் மும்பை, புனேன்னு தாண்டி கேரளாவுக்கு போயிடும்.
இப்படி ஒவ்வொரு அக்கவுண்ட்டையும் கண்டுபிடிச்சு, பணத்தை மீட்கிறது போலீஸாருக்கு ரொம்ப கஷ்டம். ஆனா, நீங்க 5-10 நிமிஷத்துக்குள்ள புகார் கொடுத்துட்டீங்கன்னா, போலீஸ் வேகமா செயல்பட்டு உங்க அக்கவுண்ட்டை முடக்கி, பணம் மோசடி பண்றவங்க கைக்கு போறதை தடுத்து நிறுத்திடுவாங்க.
எவ்வளவு சீக்கிரம் புகார் கொடுக்கணும்?
போலீஸ் அதிகாரிகளும், சில ரிப்போர்ட்டுகளும் சொல்றது என்னன்னா, ஒரு மோசடி மதியம் 3 மணிக்கு நடந்துச்சுன்னா, நீங்க 3:05 மணிக்குள்ள புகார் கொடுத்துடணும். அப்போதான், 3:20 மணிக்குள்ள பேங்க் இல்லனா போலீஸ் உங்க அக்கவுண்ட்டை முடக்கி, பணத்தை பாதுகாக்க முடியும். இதனால, முதல் 5 முதல் 15 நிமிஷம்தான் உண்மையான "கோல்டன் ஹவர்"னு சொல்றாங்க.
எங்க புகார் கொடுக்கிறது?
போன்ல புகார் செய்ய: 1930ங்கற நம்பருக்கு கால் பண்ணுங்க. இது சைபர் குற்ற உதவி எண்.
ஆன்லைன்ல புகார் செய்ய: www.cybercrime.gov.in இந்த வெப்சைட்டுக்கு போயும் புகார் கொடுக்கலாம்.
அருகில இருக்குற காவல் நிலையத்துக்கு நேரடியா போயி FIR பதிவு பண்ணலாம்.
மோசடி நடந்தா பயப்படாதீங்க, உடனே புகார் கொடுங்க. யாரிடமிருந்தும் எந்தத் தகவலையும் மறைக்காதீங்க. தயவுசெஞ்சு 1930க்கு உடனே கால் பண்ணுங்க. சோசியல் மீடியால உதவி கேட்கிறதுக்கு முன்னாடி போலீஸ்க்கு தகவல் சொல்லுங்க. உங்க அக்கவுண்ட்ல ஏதாவது சந்தேகமா பரிவர்த்தனை நடந்துச்சுன்னா, உடனே உங்க பேங்குக்கு தகவல் கொடுங்க.