ஸ்மார்ட்போன் இல்லாமல் உங்களால் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்? இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. உற்பத்தித்திறன், தகவல் தொடர்பு மற்றும் இணையப் பயன்பாடு போன்ற அம்சங்களை ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இருப்பினும் ஸ்மார்ட்போனை வைத்திருப்பவர்கள் கவனிக்காத ஒரு விஷயம் என்னவென்றால், அதன் மென்பொருளை புதுப்பிக்காமல் போவதுதான். இந்தப் பதிவில் ஸ்மார்ட் போனை அப்டேட் செய்யாமல் போவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பார்க்கலாம்.
1. பாதுகாப்பின்மை: ஸ்மார்ட்போனை நீங்கள் அவ்வப்போது முறையாக அப்டேட் செய்யாத போது அதன் பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடுகள் ஏற்படுகிறது. தொழில்நுட்பம் முன்னேறும்போது மென்பொருள் அமைப்புகளில் உள்ள பிரச்சனைகளை ஹேக்கர்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. இதனால் சைபர் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இத்தகைய பாதிப்புகள் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் அவ்வப்போது வழக்கமான அப்டேட்களை வெளியிடுகின்றனர். இதில் முந்தைய பதிப்பில் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தி செய்ப்படுகிறது.
2. பெர்ஃபார்மன்ஸ் குறைவு: ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் அவ்வப்போது வெளியிடும் அப்டேட்டுகளில், ஸ்மார்ட் போனில் இருக்கும் பிழைத் திருத்தங்கள், மேம்படுத்தல்கள் மற்றும் இயக்கமுறை ஆகியவற்றில் மாற்றம் செய்கின்றனர். இந்த மாற்றத்தால் பேட்டரி ஆயுல், வேகமான செயல்திறன், சிறப்பான பயனர் அனுபவம் போன்றவற்றைக் கொடுக்கிறது. எனவே இத்தகைய அப்டேட்டுகளைத் தவிர்ப்பதால் உங்கள் சாதனத்தின் பெர்பாமென்ஸ் பாதிப்படையும் வாய்ப்புள்ளது.
3. அதிக சூடு: ஒவ்வொரு முறையும் ஸ்மார்ட்போனை அப்டேட் செய்யும்போது அதன் வேகம் அதிகரிக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன் நன்றாக இயங்குவதால், அதிக வெப்பமாகும் பிரச்சனை குறைகிறது. ஆனால் ஸ்மார்ட்போன் அப்டேட்டை நீங்கள் புறக்கணிக்கும்போது, ஸ்மார்ட் போனின் பெர்ஃபார்மன்ஸ் குறைந்து, அதிக சூடாகும் பிரச்சனை ஏற்படலாம்.
4. செயலிகளில் பிரச்சனை: நீண்ட காலத்திற்கு உங்கள் சாதனத்தை எந்த அப்டேட்டும் செய்யாமல் அப்படியே வைத்திருந்தால், அதில் இருக்கும் செயலிகள் சரியாக இயங்காமல் போகலாம். ஏனெனில் புதுப்புது அப்டேட்டுக்கு ஏற்றவாறு ஸ்மார்ட்போனில் இருக்கும் செயலிகளையும் புதுப்பிப்பதால், பழைய அப்டேட்டில் இருக்கும் ஸ்மார்ட்போனில் உள்ள புதிய செயலிகள் சரிவர இயங்காமல் போகலாம். எனவே பயனர்கள் ஒரு சில சேவைகள் மற்றும் செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.
எனவே உங்கள் ஸ்மார்ட் ஃபோனுக்கு புதிய அப்டேட் வந்தால், உடனடியாக பதிவிறக்கம் செய்து அப்டேட் செய்து கொள்வது நல்லது. இதன் மூலமாக உங்கள் சாதனம் சிறப்பாக இயங்கி, பாதுகாப்பாக இருக்க வழிவகுக்கிறது. இல்லையேல் பல அச்சுறுத்தும் ஆபத்துக்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.