பிட்ரானின் இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம்: அதன் சிறப்புகள்!
பிட்ரான் நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்ச்களினுடைய சிறப்புகள்.
பிட்ரான் நிறுவனம் இந்திய சந்தையில் தன்னுடைய ஸ்மார்ட் வாட்ச்களை நிலை நிறுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனுடைய தற்போதைய செயல்பாடாக குறைந்த விலையில் நவீன வசதிகள் கொண்ட இரண்டு ஸ்மார்ட் வாட்ச்சிகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பிட்ரான் நிறுவனத்தின் ரிஃப்ளெக்ட் மேக்ஸ் ப்ரோ என்ற ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ரிஃப்ளெக்ட் ஃப்ளாஷ் என்ற ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ரிஃப்ளெக்ட் மேக்ஸ் ப்ரோவில் உள்ள சிறப்பு அம்சங்கள். இந்த வகை வாட்ச் 2.05 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. 15 நாட்கள் வரை பேட்டரியில் சார்ஜ் இருக்கும். மேலும் ப்ளூடூத் அழைப்பு, ஆரோக்கியத்தை கண்காணிக்கும் செயலி, விளையாட்டிற்கு உதவும் அலாரம் மற்றும் செயலி, சுகாதார கண்காணிப்பு செயலி ஆகியவை இதில் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஸ்மார்ட் வாட்ச்க்கு இணையான செயல்பாடுகளைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நீலம், கருப்பு, தங்க நிறம், சில்வர், பிளாக், பச்சை போன்ற வண்ணங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இது இந்தியாவில் 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரிஃப்ளெக்ட் ஃப்ளாஷ் ஸ்மார்ட் வாட்ச்சின் சிறப்புகள், இது 1.32 இன்ச் ஃபுல் டச் 2.5 டி வளைந்த டிஸ்ப்ளே கொண்டது. 10 நாட்கள் வரை இதன் பேட்டரியில் சார்ஜ் நிற்கும் சிறப்பு கொண்டது. மேலும் இதில் மெட்டல் கேஸ் இணைக்கப்பட்டிருக்கிறது. இது கருப்பு, நீலம், தங்கம் மற்றும் சில்வர் நிறங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதனுடைய இந்திய விலை 1399 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.