500 ரூபாய்க்குள்ள Gadgets வாங்கணுமா! அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க...

Electronic gadgets
Electronic gadgets

தொழில்நுட்ப உலகமாக மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலையில்  500 ரூபாய்க்கும் குறைவான விலையில் அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் Best Gadgets சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றை இப்பதிவில் காண்போம்.

1. EDNITA SUCTION PHONE CASE 

EDNITA SUCTION PHONE CASE
EDNITA SUCTION PHONE CASE

மொபைல் போன்கள் ,டேப்லெட்டுகள் அல்லது சிறிய பொருட்களை மேசை, கார், டேஷ் போர்டு, சுவர் போன்ற இடங்களில் நன்கு ஒட்ட வைத்துக் கொள்ள பயன்படும் Ednita suction phone pad   சிலிக்கான் ஒட்டும் பரப்பு கொண்டதாக இருப்பதோடு, போனை விழாமல் பாதுகாக்கிறது. காற்றோட்டம் மற்றும் வெப்பத்தால் பாதிக்காத வகையில் மறுபடியும் பயன்படுத்தக் கூடியதாக விலை மலிவாக 100 ரூபாயில் கிடைக்கிறது.

2. PORTRONICS KEY LINK

PORTRONICS KEY LINK
PORTRONICS KEY LINK

கீ செயினாகவும்,  USB கேபிளாகவும் பயன்படுத்தக்கூடிய PORTRONICS KEY LINK Type c-c -60W, Type c-20W, USB -A to Type c  - 15W திறன் கொண்டது. பயணத்தின் போது அவசரத்திற்கு உதவும் கேபிளாக 25 செமீ நீளமாக தரமாக எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இருக்கிறது. MFi சான்றிதழ் இல்லாத இது 200 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை ஆகிறது.

3. PORTRONICS WORLD TAG

PORTRONICS WORLD TAG
PORTRONICS WORLD TAG

ஒரு ஆண்டு காலம் வரை நீடிக்கும் பேட்டரி மற்றும் தொலைந்து போன பொருளைக்  கடைசியாக இருந்த இடத்தை காட்டும். மேலும் ஒரு பொருளை மறந்துவிட்டு சென்றால் உங்கள் போன் அலாரம் எழுப்புவதோடு, பொருளை கண்டுபிடிக்க சத்தம் எழுப்பும். சாவி, பை/ லேப்டாப், பணப்பை(Wallet) செல்லப்பிராணி (pet),வாகன சாவி இவற்றை கண்டுபிடிப்பதற்கு மொபைல் போனுடன் இணைக்கப்பட்ட Portronics world TAG பயன்படுவதோடு,499 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

4. PORTRONICS TOAD 8

PORTRONICS TOAD 8
PORTRONICS TOAD 8

லேப்டாப் ,டெஸ்க்டாப் ,டேப்லெட் போன்ற சாதனங்களில் வயர்லெஸ் முறையில் பயன்படுத்தப்படும் இதில் USB  nano receiver மூலமாக 2.4GHZ தொழில்நுட்பத்தில் ப்ளூடூத் மூலமாக இணைக்கலாம்.800/1200/1600DPI வரை இருப்பதோடு noise free clicking வசதி கொண்டதாக இருக்கிறது. எந்த சாப்ட்வேர் இன்ஸ்டலேசனும் தேவையில்லாத USB  ரிசீவரை இணைத்தவுடன் பயன்படுத்தலாம் . ரூபாய் 500 விலையில் கிடைக்கிறது.

5. PTRON FUNK WOW

PTRON FUNK WOW
PTRON FUNK WOW

சார்ஜ் செய்யும் போது LED கண்ட்ரோல் பட்டன், 6W Speaker,FM mode,Type C charger,SD card வசதி கொண்டது.IPX 5 rating மற்றும் water resistance உள்ள இந்த PTRON FUNK WOW Gadget 350 ரூபாயில் கிடைக்கிறது.

6. ZEBRONICS POWER BANK

ZEBRONICS POWER BANK
ZEBRONICS POWER BANK

LED Indicator,Type C மற்றும் micro USB மூலம் சார்ஜ் செய்யலாம்.12W அதிகபட்ச சார்ஜிங் ஸ்பீடாக உள்ளது. இந்திய தயாரிப்பாக இருப்பதால் சற்று தரமாக கையாள எளிதாக 500 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

7. OBLIVION 3 IN 1 MULTIPLUG ADAPTER

OBLIVION 3 IN 1 MULTIPLUG ADAPTER
OBLIVION 3 IN 1 MULTIPLUG ADAPTER

குறுகிய இடங்களில் ஸ்விட்ச் போர்டுடன் இணைக்கும் இந்த சாதனம் சீன தயாரிப்பாக இருப்பதால் 100 ரூபாய் விலையில் மல்டி பிளக்ஸ் அடாப்டர் ஆக கிடைக்கிறது. 3 மின் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் குறிப்பாக சோபா மற்றும் ஸ்விட்ச் போர்டு உள்ள குறுகிய இட.ங்களில் எளிதாக  பயன்படுத்தலாம்.

8. UBON 65W PD CHARGER

UBON 65W PD CHARGER
UBON 65W PD CHARGER

Type C -65W ,TypeA -20W திறன் கொண்ட இது iphone, samsung, ziomi, ஒன் பிளஸ் ஒன், oppo என  Real me தவிர எந்த வகை ஃபோனுக்கும் பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை இணைத்தால் சார்ஜர் தானாக மின்சாரத்தை பகிர்வதோடு over voltage, over current, short-circuit போன்ற அபாய நிலையில் இருந்து பாதுகாக்கும் இது 450 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

500 ரூபாய்க்கும் குறைவாக Gadgets வாங்க நினைப்பவர்கள் மேற்கூறிய பொருள் வாங்கி பட்ஜெட்டுக்குள் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com