Ragi Koozh: இப்படி ஒரு முறை ராகி கூழ் செஞ்சு பாருங்க! 

Ragi Koozh
Ragi Koozh

வெயில் காலம் தொடங்கிவிட்டது. இனி நம்மை நாம் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிக அவசியம். எனவே அவ்வப்போது குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொண்டு, நம் உடலை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக நாம் நம் உடலை கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம். அந்த வகையில் நம் உடலை குளிர்ச்சியாக்கும் பாரம்பரிய உணவுகளில் ராகிக் கூழ் முக்கிய இடத்தில் உள்ளது. எனவே இப்பதிவில் ராகிக்குள் எளிமையாக எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • ராகி மாவு ¼ கப்

  • தண்ணீர் 4 கப்

  • உப்பு தேவையான அளவு 

  • மோர் 1 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றி மிதமான தீயில் வேக வையுங்கள். 

மாவில் எவ்வித கட்டிகளும் இல்லாமல் கிளறிக் கொண்டே இருந்தால் ராகி மாவு கொஞ்ச நேரத்திலேயே நன்றாக வெந்துவிடும். பின்னர் அதை அப்படியே இறக்கி இரவு முழுவதும் வைத்து விடவும். 

இதையும் படியுங்கள்:
iPhone 16 Pro: இது போன் இல்ல கம்ப்யூட்டர்.. வேற லெவல் அம்சங்கள்! 
Ragi Koozh

காலையில் இந்த கூழ் கெட்டியான பதத்திற்கு மாறி இருக்கும். அதை அப்படியே மோர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து குடித்தால், வேற லெவல் சுவையில் இருக்கும். இதனுடன் கொஞ்சமாக வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து குடித்தால், அந்த கால நினைவுகள் உங்கள் மனதை வருடிச் செல்லும். 

வெயில் காலத்திற்கு அவ்வப்போது நீங்கள் குழ் குடிப்பது மூலமாக உங்கள் உடல் சூட்டை தணித்துக்கொண்டு ஆரோக்கியமாக இருக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com