ChatGPTயின் 'Deep Research' உபயோகிப்பதற்கு முன் இத படியுங்க..!

ChatGPT Deep Research
ChatGPT Deep Research
Published on

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence) தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. அதில் சமீபத்திய முக்கியமானதொரு வளர்ச்சி டீப் ரிசர்ச் (Deep Research) என்ற சாட் ஜிபிடியின்(Chat GPT) புதியதொரு வெளியீடு. 'அது என்ன சார் டீப் ரிசர்ச்?' என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. ஆழ்ந்த ஆராய்ச்சி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏஜென்டிக் ஏஐ (Agentic AI) என்ற பிரிவின் கீழ் வருகிறது.

அடுத்தபடியாக ஏஜென்டிக் ஏஐ என்றால் என்னவென்று பார்ப்போம். ஏஜென்டிக் ஏஐ என்பதை தமிழில் முகவர் செயற்கை நுண்ணறிவு என அழைக்கலாம். ஒரு செயலை ஏஜென்டிக் ஏஐ இடம் கொடுத்து விட்டால், அது ஒரு மனிதனுடைய மேற்பார்வையின்றி தானாகவே அதனைச் செய்து முடிக்கும். தொடர்ந்து கற்று தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கும். இத்தகைய முகவர் செயற்கை தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் கால் பதிக்க தொடங்கிவிட்டது. உதாரணமாக, தானியங்கி சிற்றுந்துகள் (self driving cars) இத்தகைய முகவர் செயற்கை நுண்ணறிவு பிரிவைச் சார்ந்தவையே.

வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இத்தகைய தானியங்கி செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சிகளின் முன்னோடிகளாக, இரண்டாம் உலகப்போரின் போது ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அலன் டியூரிங் (Alan Turing) மற்றும் கடந்த நூற்றாண்டைச் சேர்ந்த நார்பர்ட் வீனர் (Norbert Wiener) பின்னூட்ட அமைப்பைக் (Feedback Systems) ஆகியவற்றைக் கூறலாம்.

இப்போது கேள்விக்கு வருவோம். சாட் ஜிபிடி யின் டீப் ரிசர்ச் என்ற கருவியைப் பற்றி பார்ப்போம்.

இது சாட் ஜிபிடி யால் பிப்ரவரி 2, 2025 அன்று வெளியிடப்பட்டது. இதில் நாம் சாட் ஜிபிடி யின் உள்ளே சென்று இந்த டீப் ரிசர்ச் என்ற கருவியைத் தேர்ந்தெடுத்து கேள்வி கேட்டால், அது இணையத்தில் நமக்கான பல்வேறு தேடல்கள் செய்து அருமையானதொரு கட்டுரையை எழுதிக் கொடுக்கும். கேள்வியின் கடினத்திற்கு ஏற்றவாறு டீப் ரிசர்ச் கருவி 5 முதல் 30 நிமிடங்கள் வரை ஒரு கேள்விக்கான கட்டுரையை எழுத நேரம் எடுத்துக் கொள்ளும். இது ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாளராக உதவும்.

இந்த டீப் ரிசர்ச் சாட் ஜிபிடி யின் ஓ3 (O3) என்ற ஆழமான கற்றல் தரவுத்தொகுப்பை (Large Language Model) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த ஓ3 ஏற்கனவே வந்த மற்ற ஆழமான கற்றல் தரவுத்தொகுப்புகளை விட இன்னும் அருமையாக மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு. இதற்கு அதிக கணினித்திறன் தேவை என்பதால், இதனைப் போலவே ஆனால் சற்று குறைந்த கணினி திறனைப் பயன்படுத்தும் இலேசான ஆழமான கற்றல் தரவுத்தொகுப்பும் ஓ3 மினி (O3 mini) கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
AI-ன் இருண்ட பக்கம்: போலி ஆதார் அட்டை உருவாக்கிய ChatGPT! 
ChatGPT Deep Research

இந்த டீப் ரிசர்ச் கருவியை சாட் ஜிபிடி யின் ப்ரோ (Pro) வகை பயனர்கள் மாதம் 250 முறை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். பிளஸ் (Plus), டீம் (Team), என்டர்பிரைஸ் (Enterprise) மற்றும் எஜு (Edu) பயனர்கள் 25 முறை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். இலவச பயனர்கள் மாதம் 5 முறை இதனைப் பயன்படுத்தலாம்.

சாட் ஜிபிடி யின் இந்த டீப் ரிசர்ச், செயற்கை நுண்ணறிவின் திறன் மதிப்பீட்டுத் தேர்வான மனித குலத்தின் கடைசி பரிட்சையில் (Humanity's Last Exam) 26.6% மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இது இதுவரை ஆழமான கற்றல் தரவுத்தொகுப்புகள் பெற்றதிலேயே மிக அதிக மதிப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பரிட்சையில் 100 பிரிவுகளில் 3000 கேள்விகள் இருக்கும். மொழியியலிருந்து இராக்கெட் தொழில்நுட்பம் வரை, செவ்வியல் இலக்கியங்கள் முதல் சுற்றுப்புற சூழலியல் வரை என பல்வேறு துறை சார்ந்த கேள்விகளை உடையது. ஆனால், இந்த டீப் ரிசர்ச் கருவியும் தவறு செய்ய வாய்ப்புள்ளது என சாட் ஜிபிடி கூறியுள்ளது. உண்மையான தகவல்கள் மற்றும் வதந்திகளிடையே இது வேறுபாடு காண இயலாமல் போகலாம். எனவே, இது கொடுக்கும் தகவல்களை நாம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ChatGPT-யில் பகிரக்கூடாத 5 முக்கிய தகவல்கள்!
ChatGPT Deep Research

செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களிடையே தற்போது கடும் போட்டி நிலவுகிறது. சீனாவின் டீப் சீக் (Deep seek) சாட் ஜிபிடி க்கு பெரிய சவாலை சமீபத்தில் கொடுத்தது. சாட் ஜிபிடி யின் இந்தப் புதிய வரவு எத்தகையதொரு மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு உலகில் நிகழ்த்தப் போகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com